Bhakkiyalakhsmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகா கர்ப்பமாக இருப்பது முதலில் பாக்கியாக்கு தெரிந்த நிலையில் தற்போது ஈஸ்வரிக்கும் தெரிந்து விட்டது. அந்த நேரத்தில் ஈஸ்வரி, ராதிகாவிடம் இந்த குழந்தை வேண்டாம் களைத்துவிடு என்று சொல்கிறார். ஆனால் ராதிகா எதையும் கேட்காமல் இது எங்களுடைய குழந்தை நாங்கள் முடிவு எடுத்துக் கொள்கிறோம்.
உங்களுக்கு இதில் தலையிட எந்த உரிமையும் இல்லை என்று ஈஸ்வரியை அசிங்கப்படுத்தி விட்டார். இந்த விஷயத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக ராதிகா தடாலடியாக கோபிடம் இந்த உண்மையை குடும்பத்தில் இருப்பவர்களிடம் போட்டு உடைக்க வேண்டும் என்று சொல்லிவிடுகிறார்.
ஆனால் கோபி எப்படி இதை எல்லோரிடமும் சொல்ல என்று தயக்கத்துடனையே தடுமாறி வந்தார். பிறகு ராதிகா தொந்தரவு பண்ணியதால் கோபி நான் சொல்லிவிடுகிறேன் என்று முடிவுக்கு வந்து விடுகிறார். உடனே குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஆஜராகிய நிலையில் கோபி சொல்ல தயங்கிக் கொண்டே இழுத்தடித்தார்.
கோபிக்கு கெட் அவுட் சொன்ன ஈஸ்வரி
இதனை எல்லாம் வேடிக்கை பார்த்த பாக்யா மாஸாக எழுந்து வந்து நான் சொல்லுகிறேன் என்று சொல்ல ஆரம்பிக்கிறார். அப்பொழுது எல்லோரும் என்ன விஷயம் என்று ஆர்வத்துடன் கேட்ட நிலையில் உங்க அப்பா திரும்பவும் அப்பாவாக போகிறார். அதாவது அவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்று பாக்கியா அனைவரது முன்னிலையும் சொல்லிவிடுகிறார்.
இதைக் கேட்டு ஒவ்வொருவரும் அதிர்ச்சியான நிலையில் கோபியை அருவருப்பாக பார்த்து எதுவும் சொல்லாமல் போய்விடுகிறார்கள். பின்பு எழில், கோபியிடம் நீங்கள் இங்கே இருப்பது எங்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் வெளியே போங்க என்று சொல்கிறார். இதை கேட்ட கோபி எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் என்ன வெளியே போக சொல்ல நீ யார் என்று எழிலை பார்த்து கேட்கிறார்.
அது மட்டும் இல்லாமல் இது நான் கஷ்டப்பட்டு கட்டின வீடு என்று வாய் கூசாமல் வாய்ச்சவடால் விடுகிறார். இதனை பார்த்து கடுப்பான பாக்கியா இது நான் வாங்கின வீடு. எது சொல்வதாக இருந்தாலும் எனக்கு உரிமை இருக்கிறது தானே. இப்ப நான் சொல்கிறேன் இந்த வீட்டை விட்டு வெளியே போங்க என்று பாக்யா தெனாவட்டாக சொல்கிறார்.
உடனே கோபி நீ சொன்னாலாம் நான் கேட்க மாட்டேன். எங்க அம்மா சொல்லட்டும் எதுவாக இருந்தாலும் என்று ஈஸ்வரி பின்னாடி ஒளிவதற்கு கோபி பிளான் பண்ணி விட்டார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத படி ஈஸ்வரி, உன் பிள்ளைகள் ஏதாவது செய்வதற்குள் இந்த வீட்டை விட்டு ஓடிப் போய்விடு என்று கோபிக்கு ஒட்டுமொத்தமாக சேர்ந்து ஆப்பு வைத்து விட்டார்கள்.
என்ன ஆனாலும் நான் கோபிக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன் என்று இத்தனை நாளாக அராஜகம் பண்ணிட்டு வந்த ஈஸ்வரி திடீரென்று அந்தர் பல்டி அடித்ததற்கான காரணம் இனியும் கோபிக்கு சப்போர்ட் பண்ணினால் நமக்கும் இருக்கும் இடம் போய்விடும். இந்த பாக்யாவும் பிள்ளைகளும் சேர்ந்து நம்மளையும் துரத்தி விடுவார்கள் என்ற பயத்தினால் ஈஸ்வரி கோபிக்கு கெட் அவுட் சொல்லிவிட்டார்.
இதை எல்லாம் வேடிக்கை பார்க்கும் ராதிகா இனியும் மானம் மரியாதை கொஞ்சமாக இருந்தால் இந்த வீட்டில் இருக்காமல் கோபியை கூட்டிட்டு வெளியே போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து இவர்களுக்கு பிறக்கும் குழந்தையை ஒட்டி பழனிச்சாமிக்கும் பாக்யாவிற்கும் கல்யாணம் நடக்கவும் வாய்ப்பிருக்கிறது.