திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

மாஸ் ஹீரோவின் அசுர வளர்ச்சிக்கு காரணமான மனைவி.. நாசுக்காக செய்யும் வேலை

தற்போதைய தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக மாறி இருப்பவர்தான் அந்த இளம் நடிகர். ஆரம்பத்தில் ஒரு காமெடி நடிகர் போன்று பார்க்கப்பட்ட இவர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று ஒரு முன்னணி ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.

ஹீரோவாக மட்டுமல்லாமல் பாட்டு எழுதுவது, தயாரிப்பு என்று வேற லெவலில் அவர் போய்க் கொண்டிருக்கிறார். இந்த வெற்றி எல்லாம் அவருக்கு சாதாரணமாக கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் நடிகருக்கு ஏகப்பட்ட பண சிக்கல்களும், பிரச்சனைகளும் இருந்தது.

அதையெல்லாம் தாண்டி நடிகர் இப்போது பாக்ஸ் ஆபிஸ் நாயகன் என்ற அந்தஸ்தில் இருக்கிறார். அவரின் இந்த அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது அவரின் மனைவி தானாம். பொதுவாக வெளியிடங்களில் அதிகம் தென்படாத நடிகரின் மனைவி சத்தம் இல்லாமல் ஒரு வேலையையும் செய்து வருகிறார்.

அதாவது நடிகரின் தயாரிப்பு நிறுவனத்தை திறமையாக நடத்தி வருவதே அவர் தானாம். ஆரம்பத்தில் நடிகர் பல நஷ்டத்தை சந்தித்து வந்த நிலையில் மனைவி அதை எல்லாம் சரி செய்து இப்போது நிறுவனத்தை லாபகரமாக நடத்தி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சினிமாவை விட்டு செல்லலாம் என்ற முடிவில் இருந்த நடிகரையும் தன்னம்பிக்கை கொடுத்து இன்று இவ்வளவு பெரிய வெற்றி நடிகராக வலம் வர வைத்ததும் அவர்தான். மேலும் மறைமுகமாக அவர் யூடியூப் சேனல், ஓடிடி என்று தனியாக ஒரு தொழில் சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறாராம்.

அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை அவர் சொந்த ஊரில் முதலீடு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. நடிகருடைய மனைவியின் இந்த திறமையை பற்றிதான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Trending News