சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

பெட்ரூம்ல புருஷனுக்கு இந்த உரிமை கூட இல்லையா.? பளாரென செவிட்டில் அறைந்த கேப்ரில்லா

விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் காவியாவாக நடிக்கும் கேப்ரில்லா கணவர் பார்த்திபனை மனதார ஏற்றுக்கொண்டு வாழத் தயங்குகிறார். ஏனென்றால் பார்த்திபனின் தம்பி ஜீவாவை காவியா காதலித்ததால் அவரை மறக்க முடியாமல் தவிக்கிறார்.

இதை அறிந்து கொண்ட மாமியார் பார்த்திபன்-காவியா இருவரையும் பிரித்து விடுவதுதான் நல்லது என நினைக்கிறார். ஆனால் பார்த்திபன் காவியாவின் மனதில் எப்படியாவது இடம் பிடிக்க வேண்டுமென மனைவிக்குப் பிடித்ததை எல்லாம் செய்து அவர் மனதில் இடம் பிடிக்க பார்க்கிறார்.

இந்த சீரியலில் ஜீவா-பிரியா ரொமான்ஸ் சீரியல் ரசிகர்களை குஷிப்படுத்துகிறது. இதில் பிரியாவின் க்யூட்டான ரியாக்சன் மற்றும் ஜீவாவின் ரொமான்டிக் லுக் போன்றவை சீரியலின் கூடுதல் பலம். மேலும் பிரியா தன்னுடைய தோழியின் திருமணத்திற்காக கையில் மருதாணி வைத்துக்கொண்டிருக்கிறார்.

உடனே பார்த்திபன் காவியாவிற்கு மருதாணி பிடிக்கும் என்பதால், அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருக்கே தெரியாமல் கையில் மருதாணி போட்டு விடுகிறார். தூங்கி எழுந்ததும் கேப்ரில்லா கையில் இருக்கும் மருதாணியை பார்த்ததும் அதைப் போட்டு விட்ட பார்த்திபனை கன்னத்தில் அறைகிறார்.

அவர் அடிப்பதற்காக அறைந்தது போல் தெரியவில்லை. தன்னுடைய அனுமதி இல்லாமல் கையில் போட்டுவிட்ட மருதாணியை பார்த்திபனின் கன்னத்தில் ஒட்டி வைக்க வேண்டும் என்பதற்காக அடித்திருக்கலாம்.

இருப்பினும் துரத்தி துரத்தி காதலிக்கும் கணவரை வெறுக்கும் கேப்ரில்லா எல்லைமீறி கன்னத்தில் அறைவது கொஞ்சம் ஓவர். மனைவியின் பாசத்திற்காக ஏங்கும் பார்த்திபன், கேப்ரில்லா கையில் அடி வருவதையும் சந்தோசமாக ஏற்றுக் கொள்கிறார்.

Trending News