Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா தாத்தாவை நினைத்து ரொம்பவே பீல் பண்ணுகிறார் என்பதால் கோபி இனியாவை காலேஜுக்கு ட்ராப் பண்ண போகிறார். போகும் பொழுது ஒரு பொறுப்பான அப்பாவாகவும், இனியா மீது பாசத்துடன் இருக்கும் கோபி சில அறிவுரைகளை கூறி படிப்பில் கவனம் செலுத்தி தாத்தா ஆசைப்பட்ட மாதிரி நீ நல்லா பெரிய ஆளாக வரவேண்டும் என்று கோபி இனியாக்கு அட்வைஸ் கொடுக்கிறார்.
இது எதுவும் தெரியாத செல்வி, பாக்கியாவிடம் கோபி சார் உங்க மேல் இருக்க கோபத்தில் இனியாவை ஏதாவது காயப்படுத்தி பேச போகிறார் என்று சொல்கிறார். அதற்கு பாக்யா, என் மீது அவருக்கு இருக்கும் கோபத்தில் ஒரு கத்தி எடுத்து வந்து கூட என்னை குத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எந்த காரணத்தை கொண்டும் அவருடைய பிள்ளைகளை கஷ்டப்படுத்த வேண்டும் என்று துளி கூட நினைக்க மாட்டார்.
எல்லாம் சொத்தையும் பங்கு போட்டு எழுதி வைத்த தாத்தா
அதனால் நீ தேவை இல்லாமல் எதையாவது யோசித்து புலம்பாத என்று சொல்கிறார். பிறகு தாத்தாவின் பொருள்களை எல்லாம் எடுத்து ஒதுங்க வைக்கும் பொழுது அவர் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு எழுதி வைத்த லெட்டர் கிடைக்கிறது. அந்த லெட்டருடன் சொத்து பற்றின உயிலும் எழுதி வைத்திருக்கிறார். இதை குடும்பத்தில் இருப்பவர்கள் முன்னாடி ஈஸ்வரி கொண்டு வந்து படிக்க சொல்கிறார்.
அப்படி ஈஸ்வரி மற்றும் பாக்யாவிற்கு எழுதியிருக்கும் லெட்டரை படித்து மறுபடியும் தாத்தாவை நினைத்து வருத்தப்படுகிறார்கள். அத்துடன் தாத்தாவிடம் இருந்த சொத்துக்களையும் பணத்துக்களையும் ஈஸ்வரி மற்றும் பாக்யாவிற்கு பங்கு போட்டு எழுதி வைத்திருக்கிறார். அதே மாதிரி தாத்தாவின் நகையை, செழியன் மற்றும் எழிலின் பிள்ளைகளுக்கும் இனியாவிற்கும் கொடுக்க சொல்லி எழுதி இருக்கிறார்.
இதனை தொடர்ந்து பாக்யா நீ மற்றவர்களுக்காக இதுவரை வாழ்ந்தது போதும். இனி உனக்காகவும் உன் சந்தோஷத்துக்கு பிடித்தமான விஷயங்களை பார்த்து அதையும் செய்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பாக்கியாவிற்கு தாத்தா லெட்டரில் எழுதி வைத்திருக்கிறார். அந்த வகையில் தாத்தாவிற்கு ஏற்கனவே ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பது முன்கூட்டியே தெரிந்திருக்கிறது.
அதனால் தான் லெட்டர் மற்றும் சொத்துக்களையும் பிரித்து எழுதி வைத்திருக்கிறார். அத்துடன் என்னுடைய மறைவிற்குப் பிறகு என்னுடைய பென்ஷன் பணத்தை ஈஸ்வரிக்கு எப்படி கொடுக்க வேண்டும் என்பதற்கான விபரத்தையும் எழுதி வைத்திருக்கிறேன் என்று எழுதி இருக்கிறார். இதையெல்லாம் பார்த்த குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் தாத்தாவிற்கு முன்கூட்டியே இதெல்லாம் தெரிந்திருக்கிறது.
அதனால் தான் இப்படி எல்லாம் எழுதி வைத்து சொத்துக்களையும் பிரித்து வைத்திருக்கிறார் என்று நினைத்து வருத்தப்படுகிறார்கள். ஆனால் கடைசியில் கோபிக்கு கிடைத்த தண்டனை அப்பாவுக்கு எந்த ஒரு சடங்கு சம்பிரதாயமும் செய்ய முடியாமல் அனைவரும் முன்னிலையிலும் அசிங்கப்பட்டு நின்ன தான் மிச்சம். போதாதற்கு இப்பொழுது சொத்திலும் பணத்திலும் எந்த ஒரு நயா பைசாவும் கிடையாது என்பதற்கு ஏற்ப மொத்தமாக அடி வாங்கி விட்டார்.
இன்னும் இதெல்லாம் தெரிந்தால் கோபி இன்னும் என்னெல்லாம் செய்ய காத்துக் கொண்டிருக்கிறாரோ, ஏற்கனவே மொத்த கோபத்தையும் பாக்யா மீது காட்டி வருகிறார். தற்போது சொத்தும் நமக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றால் அந்த கோபத்தையும் பாக்கியாவிடம் தான் காட்டுவார்.
பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்
- அப்பா மகன் உறவே இல்லாமல் கோபியை விட்டுப் போன பந்தம்
- பாக்கியலட்சுமிக்கு முன் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் முக்கியமான சீரியல்
- ஈஸ்வரி கொடுத்த டார்ச்சரால் பிக் பாஸ் போகும் மருமகள்