புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிம்ரன் மார்க்கெட்டை காலி பண்ண நக்மா செய்த வேலை.. மொத்தமாய் திருப்பி அடித்த கர்மா

Simran: நம்ம ஒன்னு நினைச்சா தெய்வம் ஒன்னு நினைப்போம். அப்படி ஒரு கதை தான் நடிகை நக்மா வாழ்க்கையில் நடந்திருக்கிறது. மும்பையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சினிமா நடிகைகளில் புஷ்புவுக்கு பிறகு நக்மா பெரிய அளவில் பேர் வாங்கினார்.

சரத்குமார், கார்த்திக் என டாப் ஹீரோக்களுடன் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்தார். அது மட்டும் இல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இவர் ஜோடியாக நடித்த பாட்ஷா படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. நக்மா முன்னணி நடிகையாக இருந்தபோது சிம்ரன் அறிமுக நடிகையாக சினிமாவிற்குள் நுழைந்தார்.

சிம்ரனின் உடல் அமைப்பு மற்றும் நடனமாடும் திறன் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று தந்தது. உண்மையை சொல்ல போனால் சிம்ரன் வளர வளர நக்மாவின் மார்க்கெட் அப்படியே கீழே சரிய தொடங்கியது. இது நக்மாவுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

மொத்தமாய் திருப்பி அடித்த கர்மா

சிம்ரனின் மார்க்கெட்டை தட்டித் தூக்கத்தான் அவருடைய தங்கை ஜோதிகாவை இண்டஸ்ட்ரிக்குள் கொண்டு வந்திருக்கிறார் நக்மா. சிம்ரன் மற்றும் ஜோதிகா இருவருமே சமகாலத்து போட்டியாளர்களாக தமிழ் சினிமாவில் போட்டி போட்டு நடித்துக் கொண்டிருந்தார்கள்.

இருந்தாலும் ஜோதிகாவால் சிம்ரனின் உடலமைப்பு மற்றும் நடன திறமைக்கு கிட்ட கூட வர முடியவில்லை என்பதும் நிதர்சனமான உண்மை.அப்போதைய தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கண்ணியாக தான் சிம்ரன் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தார்.

நக்மா செய்த வினை அவருக்கே கேடாக முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட ஜோதிகா மற்றும் நக்மா இருவருமே ஒரே முக அமைப்பு மற்றும் உடலமைப்பை கொண்டவர்கள். நக்மாவின் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சில சர்ச்சைகளால் அவருடைய மார்க்கெட் மொத்தமாய் காலியானது.

நக்மாவை நடிக்க வைக்க ஆசைப்பட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் அந்த இடத்தில் ஜோதிகாவை நிரப்பினார்கள். இதனால் ஜோதிகாவுக்கும் நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது.

சிவகுமார் குடும்பத்தில் கும்மி அடித்த ஜோதிகா

Trending News