Gossip: குடும்ப கௌரவம், மானம் தான் முக்கியம் என வாழ்ந்தவர் தான் அந்த பெரிய நடிகர். அவர் உயிரோடு இருந்த காலகட்டத்திலும் சரி இப்போதும் சரி அந்த குடும்பத்திற்கு திரையுலகில் பெரும் மரியாதை இருக்கிறது.
ஆனால் நடிகரின் இரண்டாவது வாரிசால் அது பறிபோகும் நிலை இருந்தது. வாரிசு நடிகர் தன்னுடன் நடித்த நடிகையுடன் ரொம்பவும் இணக்கமாக இருந்தது இண்டஸ்ட்ரியில் அனைவருக்கும் தெரியும்.
மனைவி குழந்தைகள் இருந்த போதும் நடிகர் அந்த நடிகையுடன் ரகசிய குடித்தனம் நடத்தினார். இது பெரிய நடிகருக்கு தெரிய வர நடிகையை மிரட்டி மகனை கண்ட்ரோலுக்கு கொண்டு வந்தார்.
வாரிசால் தண்டவாளத்தில் ஏறிய வண்டவாளம்
இந்த விவகாரம் இப்போதும் கூட கிசுகிசுக்கப்படுவது உண்டு. ஆனால் இதையெல்லாம் தாண்டி மற்றொரு விஷயம் பூதாகரமாக வெடித்து பெரிய நடிகரின் குடும்ப மானத்தை பேசு பொருள் ஆக்கிவிட்டது.
அதாவது நடிகரின் மூத்த வாரிசும் பிரபல நடிகையின் உடன் பிறப்பை ரகசிய திருமணம் செய்து வாழ்ந்து இருக்கிறார். அவர் மூலமாக பிறந்த வாரிசை கூட தன் ரத்தம் என்று சொல்லிக்கொள்ள அவர் விரும்பவில்லை.
அப்பாவுக்கு பயந்து இப்படி ஒரு வேலையை பார்த்த இவர் தற்போதும் கூட வாரிசுக்கான உரிமையை கொடுக்கவில்லை. எல்லாத்துக்கும் காரணம் சொத்து தான் என சினிமா விமர்சகர்கள் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.
நடிகர் உயிரோடு இருந்தபோது கௌரவத்தை காப்பாற்ற பல தில்லாலங்கடி வேலைகளை செய்தார். ஆனால் அவர் இப்போது இல்லாத நிலையில் அடுத்தடுத்த வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறி வருகிறது.