சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

மதத்தை ஒழிக்க விஜய்யின் அப்பா செய்த வேலை.. ஆனா தன்னை வேறுமாறி அடையாளப்படுத்தும் தளபதி

விஜய் நடிக்க வந்த காலங்களில் இருந்து அவர் என்ன ஜாதி என்ன மதம் என்றெல்லாம் தெரியாது. அவர் நடிப்பை பார்த்து மற்றும் அவரது நடனத்தை பார்த்து ரசிகர்கள் ரசித்து வந்தனர். காலப்போக்கில் அவரது பெயர் மற்றும் அதன் மதம் பற்றி பல அரசியல் தலைவர்கள் பேசி அதனை வெளிக்கொண்டு வந்தனர். அப்போதுதான் விஜய் இந்த ஜாதி, இந்த மதம் என்றும் தெரிய வந்தது.

அதற்கு தகுந்த மாதிரி விஜய்யும் அவரது படங்களில் தனது மத அடையாளத்தை அதிகமாக காண்பிக்க ஆரம்பித்தார். பெரிய படங்களிலும் அவரது மத அடையாளத்தை காட்டாமல் இருந்ததே இல்லை அதுவே முகம் சுளிக்கும் அளவிற்கு மாறியது. இருந்தாலும் ரசிகர்கள் அவரை ஏற்றுக் கொண்டு கொண்டாடி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு அவரது அப்பா எஸ்.ஏ.சி ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார்

Also Read :  விஜய்யின் அப்பாவால் லியோவுக்கு வந்த ஆபத்து.. ஜெயிலர் வசூலை முறியடிக்க வாய்ப்பே இல்ல

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி ஒரு மேடையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் பொழுது ஒரு கிறிஸ்தவ பள்ளியில் சேர்த்தார். அப்பொழுது அந்த பள்ளியில் கொடுக்கப்பட்ட படிவத்தை எழுதி கொடுத்துள்ளார் சந்திரசேகர். அதில் என்னென்ன இருந்தது இவர் என்ன செய்தார் என்று அவரே கூறியுள்ளார்.

அந்த படிவத்தில் நேஷனலிட்டி இந்தியன் என்று குறிப்பிட்டு இருந்தார் அதேபோல் ரிலிஜியன் மற்றும் கேஸ்ட் என்ற வரி அதில் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு எஸ்.ஏ.சி கொஞ்சம் கூட தயக்கமே இல்லாமல். அனைத்துமே தமிழன் என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார். இதை கவனித்த பள்ளி நிர்வாகம் இது தவறாக எழுதி உள்ளீர்கள் ஒழுங்காக எழுதிக் கொடுங்கள் என கூறியுள்ளார்கள். அதற்கான விளக்கத்தை மறுபடியும் எஸ்.ஏ.சி தைரியமாக கூறியுள்ளார்.

Also Read : விஜய்யை மதிக்காமல் பேராசையில் டாப் ஹீரோவை சந்தித்த சஞ்சய்.. உனக்கு வயசு பத்தல என திருப்பி அனுப்பிய சோகம்

பள்ளி நிர்வாகம் இதை ஏற்கவில்லை அதற்கு எஸ்.ஏ.சி நான் ஒரு கிறிஸ்தவன் என் மனைவி ஒரு முதலியார் எப்படி இரண்டு பேரையும் சேர்த்து கிறிஸ்துவ முதலி என்றா போட முடியும் என நக்கலாக கூறியுள்ளார். மீண்டும் மறுத்துள்ளது பள்ளி நிர்வாகம் அதன்பின் எஸ்.ஏ.சி அவரது பாணியில் நீங்கள் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தி இந்த விஷயத்தை பெரிதாக மாற்றி விடுவேன் என்று பயமுறுத்தி உள்ளார்.

அதன் பின் வேறு வழியின்றி அந்த பள்ளி நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. இன்று வரை விஜய் அந்த சர்டிபிகேட்டில் தன் ஜாதி என்ற இடத்தில் தமிழன் என்று மட்டும் தான் இருக்கும். ஜாதியை ஒழிப்பேன் என்றும் நான் ஒரு தமிழன் என்றும் பெருமையாக பேசக்கூடாது அவரவர் தன் குழந்தைகளுக்கு இதே போல் செய்தால் தானாக ஜாதி அழிந்துவிடும் என அழகாக பேசியுள்ளார்.
எஸ்.ஏ.சி சரியாகத்தான் இருக்கிறார். விஜய் வளர்ந்த பிறகு தனது மத அடையாளத்தை படங்களில் காண்பித்து வருவது வருந்தத்தக்கது.

Also Read : விஜய்க்கு பாய் சொல்லிட்டு திருமணத்திற்கு ஓகே சொன்ன திரிஷா.. அக்கட தேசத்தில் இருந்து வரும் புது மாப்பிள்ளை

Trending News