ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஃபிகரை பார்த்ததும் மனைவியை மறந்த இளம் நடிகர்.. பத்ரகாளியாக மாறி சாமியாடியதால் நடுங்கிப் போன ஹீரோ

அக்கட தேசத்து இளம் நடிகர் ஒருவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருக்கின்றனர். சாக்லேட் பாயாக வலம் வரும் அந்த ஹீரோ சமீபத்தில் ஒரு விழாவுக்கு தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார். அங்குதான் அவருக்கு பிரச்சனையே ஆரம்பமாகி இருக்கிறது.

அதாவது அந்த ஹீரோ வருகிறார் என்று தெரிந்ததுமே அங்கு வந்த இளம் பெண்கள் அனைவரும் அவரை நோக்கி படையெடுத்து இருக்கின்றனர். அதை தொடர்ந்து அவரை தொட்டுப் பார்ப்பது, செல்பி எடுப்பது, கட்டிபிடிப்பது என ஓவர் ரவுசு விட்டிருக்கின்றனர். நடிகரும் அந்த ஜோதியில் அப்படியே ஐக்கியமாகி இருக்கிறார்.

தாராள மனதுடன் ரசிகைகளுடன் இணைந்து செல்பி எடுத்து அவர்களை குஷிப்படுத்தி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் நேரம் போவதே தெரியாமல் மனைவியை கூட மறந்துவிட்டு அரட்டை அடித்தபடி இருந்திருக்கிறார். இதை எல்லாம் நடிகரின் தர்மபத்தினி கண்ணில் அனல் பறக்க பார்த்திருக்கிறார்.

ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத ஹீரோ மனைவியை வைத்துக் கொண்டே சைட் அடித்து ஜாலி பண்ணி இருக்கிறார். பொது இடத்தில் கோபத்தை காட்டக்கூடாது என்று நினைத்த நடிகரின் மனைவி இரு இரு வீட்டுக்கு வா உன்ன கவனிச்சிக்கிறேன் என்ற ரீதியாக அமைதி காத்து வந்திருக்கிறார்.

அதன் பிறகு நடந்தது தான் பெரும் கூத்தாக இருந்திருக்கிறது. அதாவது வீட்டுக்கு வந்த கணவரை அவரின் மனைவி பத்ரகாளியாக மாறி லெப்ட் அண்ட் ரைட் வாங்கி இருக்கிறார். பேயாட்டம் போட்ட மனைவியின் ஆக்ரோஷத்தை பார்த்து நடுங்கிப் போன நடிகர் அதெல்லாம் சும்மா விளையாட்டுக்கு என்று பம்மி கொண்டு சமாதானப்படுத்தினாராம்.

ஆனாலும் மனைவிக்கு ஆத்திரம் தீரவில்லை. இதனால் நொந்து போன நடிகர் காலில் விழாத குறையாக கெஞ்சி கதறி ஒரு வழியாக அவரை மலை இறங்க வைத்திருக்கிறார். இப்படியாக ஃபிகரை பார்த்து மனைவியின் கோபத்திற்கு ஆளான நடிகரை பற்றிய பேச்சு தான் கோடம்பாக்கத்தில் நமக்கு சிரிப்போடு கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Trending News