Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அந்த நடிகருக்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சனை.. கடைசியில இந்த படமும் அவ்வளவு தானா

அந்த நடிகருக்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சனை.. கடைசியில இந்த படமும் அவ்வளவு தானா

Gossip: மூன்று எழுத்து நடிகர் தற்போது பயங்கர டென்ஷனில் இருக்கிறாராம். ஏற்கனவே பெரிய ஜாம்பவான்களை நம்பி ஒரு படத்தில் தலையை கொடுத்து இப்போது வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். எல்லோரும் கொஞ்சம் யோசித்து இந்த படத்தை ஓகே பண்ணி இருக்கலாமே தம்பி […]

Gossip: மூன்று எழுத்து நடிகர் தற்போது பயங்கர டென்ஷனில் இருக்கிறாராம். ஏற்கனவே பெரிய ஜாம்பவான்களை நம்பி ஒரு படத்தில் தலையை கொடுத்து இப்போது வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

எல்லோரும் கொஞ்சம் யோசித்து இந்த படத்தை ஓகே பண்ணி இருக்கலாமே தம்பி என அட்வைஸ் செய்யாத குறை தான். சரி அடுத்த படத்தில் கவனம் செலுத்தலாம் என நடிகர் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

ஆனால் அங்கும் ஒரு சிக்கல். அந்த காமெடி நடிகருடன் தொடங்குவதாக இருந்த அந்த படம் இப்போது நிறுத்தப்பட்டு விட்டதாம். தயாரிப்பாளருக்கு இருக்கும் பிரச்சனைதான் காரணம் என்கிறார்கள்.

கடைசியில இந்த படமும் அவ்வளவு தானா

ஆனால் கதை விஷயத்தில் கூட காமெடி நடிகர் மூக்கை நுழைத்திருக்கிறார். இதனால் மூன்று எழுத்து நடிகருக்கும் அவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு விட்டதாம்.

அதனாலேயே அந்த படம் இப்போதைக்கு தொடங்காது என்கின்றனர். ஆனாலும் மூன்றெழுத்தை நடிகர் இப்போது விருது இயக்குனர் படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.

இந்த படம் நிச்சயம் தனக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அவர். ஆனால் இயக்குனர் படப்பிடிப்பை வருட கணக்கில் இழுத்து விடுவார். இந்த படம் எப்ப ரிலீஸ் ஆகப்போகுதோ என கோடம்பாக்கத்தில் சத்தமில்லாமல் பேசி வருகின்றனர்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.