சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

டிவி நடிகரை கண்ட்ரோலில் வைத்திருக்கும் இளம் நடிகை.. புருஷனை மீட்க வந்த மனைவியிடம் போட்ட சவால்

சினிமா ஆசையில் போராடி வந்த அந்த இளம் டிவி நடிகர் எப்படியோ தட்டு தடுமாறி ஹீரோவாகிவிட்டார். இதற்கு முழு ஆதரவு கொடுத்தது நடிகரின் மனைவி தான். அவரால்தான் நடிகர் இன்று நினைத்ததை சாதித்து இருக்கிறார். ஆனால் அங்கு தான் இப்போது பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதாவது நடிகருடன் நடித்த நடிகைக்கு அவரின் மேல் காதல் தீ பற்றி கொண்டதாம். நட்பாக பழகுவது போல் தூண்டிலை போட்ட அந்த இளம் ஹீரோயின் எப்போது நடிகருடன் ரொம்பவே நெருக்கமாகிவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளது.

அதிலும் இருவரும் நேரம் போவதே தெரியாமல் மணிக்கணக்காக போனில் பேசிக் கொண்டிருக்கிறார்களாம். அது மட்டுமல்லாமல் பார்ட்டி, பப் என சதா நேரமும் நடிகரை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றுவதையே நடிகை ஒரு வேலையாக வைத்திருக்கிறாராம்.

Also read: தாராள கவர்ச்சி காட்டிய நடிகை.. மார்க்கெட் போகும் பரிதாபம்

இதெல்லாம் நடிகரின் மனைவியின் காதுக்கு சென்று இருக்கிறது. இருந்தாலும் கணவன் மீதுள்ள நம்பிக்கையில் அவர் பொறுமையாக இருந்திருக்கிறார். ஆனால் கணவர் நடிகையுடன் ரகசிய குடித்தனமே நடத்துவதாக மனைவிக்கு தகவல் வந்திருக்கிறது. இதுதான் அவரை ஆடிப் போக வைத்துள்ளது.

அதைத்தொடர்ந்து மனைவி புருஷனை மீட்க சம்பந்தப்பட்ட நடிகையிடம் நேரடியாகவே பேசி இருக்கிறார். ஆனால் அந்த நடிகையோ உன்னால முடிஞ்சத பார். எனக்கு அவர புடிச்சிருக்கு. அவரோட தான் என் வாழ்க்கை. கல்யாணம் ஆனத பத்தி எல்லாம் எனக்கு கொஞ்சம் கூட கவலை இல்லை என திமிராக பேசியிருக்கிறார்.

இதனால் அதிர்ந்து போன நடிகரின் மனைவி இப்போது என்ன செய்வது என கையை பிசைந்து கொண்டு இருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் எங்கே கணவர் தன்னை விட்டு நடிகையின் பின்னால் போய்விடுவாரோ என்ற பீதியில் இருப்பதாக கோடம்பாக்கத்தில் சலசலக்கப்பட்டு வருகிறது.

Also read: காதலியை கழட்டி விட்டுட்டு, நடிகையை திருமணம் செய்து கொண்ட ஹீரோ.. தல பொங்கலில் வெட்ட வெளிச்சமாக்கிய மனைவி

Trending News