வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

திருமணமான நடிகரை வசியம் செய்ய பார்த்த சேச்சி.. பத்ரகாளியாக மாறி விரட்டிவிட்ட காதல் மனைவி

Gossip: எத்தனையோ நட்சத்திர ஜோடிகள் இருந்தாலும் இந்த தம்பதிகள் மீடியாவில் வெகு பிரபலம். ஒரு காலத்தில் முன்னணியில் இருந்த நடிகை அந்த இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகும் நடித்து வந்த நடிகை இப்போது கணவருக்கு உதவியாக பிசினஸை கவனித்து வருகிறார். நடிகையின் காதல் கணவரும் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்து தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பு அவர் ஹீரோவாக நடித்த படத்தில் பிரபல சேச்சி நடிகை ஹீரோயினாக நடித்தார். பொதுவாக அந்த ஹீரோ அனைவரிடமும் இயல்பாக பேசக் கூடியவர்.

சேச்சி நடிகையை விரட்டிய ஹீரோயின்

அதைப் பார்த்து மயங்கிய நடிகை அவரை தன் கண்ட்ரோலில் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார். மேலும் அவ்வப்போது காதல் தூதும் விட்டிருக்கிறார். இது எப்படியோ மனைவி நடிகைக்கு தெரிய வந்திருக்கிறது.

உடனே பத்ரகாளியாக மாறிய அவர் ஷூட்டிங் பாட்டுக்கே வந்து சேச்சியை உண்டு இல்லை என செய்துவிட்டாராம். அதன் பிறகு அம்மணி படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு துண்டை காணோம் துணியை காணோம் என ஓடி விட்டாராம்.

தற்போது அந்த நடிகை நடிப்பை எல்லாம் ஓரம் கட்டி திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். ஆனால் இந்த நடிகையின் கணவர் தொடர்ந்து நடித்து வருகிறார். இப்போதும் இளம் நடிகைகளுடன் அவர் பழகினால் உடனே மனைவி குறுக்கே வந்து விடுவாராம்.

கணவரை கண்கொத்தி பாம்பாய் கவனிக்கும் நடிகை

Trending News