வீர தீர சூரனுக்காக கால் கடுக்க காத்திருந்த ஆடியன்ஸ்.. தியேட்டர் நிர்வாகம் கொடுத்த அதிர்ச்சி, இப்படி ஆயிடுச்சே

Veera Dheera Sooran: இன்று காலையிலிருந்து வீர தீர சூரன் படத்தை பார்க்க சீயான் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் நீதிமன்ற வழக்கு காரணமாக முதல் காட்சி ரத்தானது.

அதை தொடர்ந்து மதிய காட்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது வரை நீதிமன்றத்தில் இருந்து அதற்கான உத்தரவு வரவில்லை.

இருந்தாலும் மனம் தளராத ரசிகர்கள் தியேட்டர் வாசலில் காலையிலிருந்து கால் கடுக்க காத்திருந்தனர். அதேபோல் டிக்கெட் வாங்கியாச்சு அதுக்கு என்ன தான் பதில் என நெட்டிசன்கள் ஒரு பக்கம் கேள்வி எழுப்பி வந்தனர்.

தியேட்டர் நிர்வாகம் கொடுத்த அதிர்ச்சி

இந்த சூழலில் வெற்றி தியேட்டர் உரிமையாளர் தற்போது அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது வீர தீர சூரன் தொடர்பான பிரச்சனை இன்னும் முடியவில்லை.

அதனால் நண்பகல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு ஏழு நாட்களுக்குள் பணம் திரும்ப கிடைத்து விடும்.

கவுண்டரில் டிக்கெட் வாங்கியவர்கள் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இந்த அசௌகரியத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். படம் மாலை வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

ஆனாலும் படம் ரிலீஸ் தொடர்பான குழப்பம் இருக்கிறது. நீதிமன்றம் அறிவிக்கும் வரை எதையும் உறுதியாக சொல்ல முடியாது. இருப்பினும் பட குழுவினர் பிரச்சனையை தீர்க்க போராடி வருகின்றனர்.

அதனால் மாலை அல்லது இரவில் வீர தீர சூரன் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியில இப்படி ஆயிடுச்சே.

Leave a Comment