கோலிவுட்டில் தற்போது மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ள விஷயம், தியேட்டர்களைக் காட்டிலும் OTT தளங்களில் வெளியாகும் படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைப்பதுதான்.
தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பதற்கு பார்க்கிங் டிக்கெட், பாப்கார்ன் என மொத்தமாக ரூ.2000 வரை செலவாகிறது. எனவே, அந்தத் தொகையைச் செலவிடுவதற்குப் பதிலாக, ஒரு வருட OTT சந்தாவையே வாங்கி வீட்டில் இருந்தபடியே படங்களைப் பார்த்துவிடலாம் என்பது ரசிகர்களின் கணக்காக உள்ளது.
பிரம்மாண்டமான தயாரிப்பு, பெரிய ஹீரோ என இருந்தால் மட்டுமே மக்கள் தியேட்டர்களை நோக்கிச் செல்கிறார்கள்.
சிறிய பட்ஜெட்டில் நல்ல கதையம்சத்துடன் உருவாகும் சில படங்கள் தியேட்டர்களில் ஓடத் தவறினாலும், OTT தளங்களில் வெளியாகும்போது நல்ல வரவேற்பைப் பெற்று பட்டையைக் கிளப்புகின்றன.
மேலும், பல மொழிப் படங்கள் OTT தளங்களில் கிடைப்பதும், தியேட்டர்களில் வெளியான நான்கே வாரங்களில் OTT-யில் படங்கள் வெளியாகிவிடுவதும் இந்த நிலைக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.
இன்னும் கொஞ்சம் நாட்கள் பொறுத்திருந்தால் வீட்டிலேயே படத்தைப் பார்த்துவிடலாம் என்ற எண்ணம் ரசிகர்களிடம் உருவாகியுள்ளது. இதுவே படங்களின் திரையரங்கு வசூலைப் பாதிக்கிறது.




