புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தேங்காய் சீனிவாசனையே தூக்கி சாப்பிட்ட நடிகை.. பாலச்சந்தர் செதுக்கிய அந்த கதாபாத்திரம்

கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1981ஆம் ஆண்டு ரஜினிகாந்த், மாதவி, தேங்காய் சீனிவாசன், சௌகார் ஜானகி, நாகேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தில்லு முல்லு. ஆள்மாறாட்டத்தை மையமாக வைத்து முழுவதும் நகைச்சுவையாக எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் தேங்காய் சீனிவாசன்னிடம் வேலை பார்க்கும் ரஜினி, ஐயம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன் மற்றும் இந்திரன் என இரு வேடத்தில் ஆள்மாறாட்டம் செய்கிறார். இதை தக்க வைப்பதற்காக ரஜினி பல தில்லுமுல்லு செய்கிறார்.

இப்படத்தில் ரஜினிகாந்தின் அம்மாவாக நடிப்பதற்கு சௌகார் ஜானகி தான் கரெக்டாக இருப்பார் என இந்த கேரக்டரில் அவர் தான் நடிக்க வேண்டும் என உறுதியாக இருந்தார் இயக்குனர் பாலச்சந்தர். தேங்காய் சீனிவாசன் நடிப்பில் அசத்துவார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

ஆனால் தில்லு முல்லு படத்தில் தேங்காய் சீனிவாசனை நடிப்பில் தூக்கி சாப்பிட்டுவிட்டார் சௌகார் ஜானகி. இப்படத்தில் நடிகையான சௌகார் ஜானகி, தேங்காய் சீனிவாசனை நம்ப வைப்பதற்காக ரஜினியின் அம்மாவாக நடிக்க வேண்டும்.

அவ்வாறு சௌகார் ஜானகி அம்மாவாக நடிக்கும்போது படும் அவஸ்தையான காட்சிகள் ரசிகர்கள் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது. அந்த கேரக்டரில் சௌகார்ஜானகி தவிர வேறு எந்த நடிகை நடித்திருந்தாலும் இந்த அளவுக்கு பொருத்தமாக இருந்திருக்காது.

இதனால்தான் பாலச்சந்தர் சௌகார்ஜானகி தான் இந்த கதாபாத்திரத்தை பண்ண வேண்டும் என அடம் பிடித்து அந்த கேரக்டரை செதுக்கி இருந்தார். அதுமட்டுமல்லாமல் சௌகார் ஜானகி தன் முழுத் திறமையையும் தில்லு முல்லு படத்தில் காட்டியிருந்தார். தில்லு முல்லு படம் மிகப்பெரிய வெற்றியை அடைய இவரும் ஒரு முக்கிய காரணம்.

Trending News