ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கல்யாணம், குழந்தைக்கு ஆசை படும் தமன்னா.. பெற்றோரிடம் கூட பேசவே முடியாத நிலையில் மில்க்பூயூட்டி

வெள்ளாவியில் வைத்து வெளுத்தது போன்று பளபளவென இருக்கும் நடிகை தமன்னாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். 32 வயதாகியும் தமன்னா, திருமணம் செய்து கொள்ளாமலே இருப்பதால் சமீபத்திய பேட்டி ஒன்றில் அதை வெளிப்படையாக பேசியுள்ளார்.

எல்லோரையும் போல் எனக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என பெற்றோர்கள் நினைக்கின்றனர். எனக்கும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை எல்லாம் இருக்கிறது.

Also Read: ஒரு வருடத்திற்குலேயே அதிக படங்கள் நடித்த 5 நடிகைகள்.. நயன்தாராவை ஓரங்கட்டிய பிரபல நடிகை

ஆனால் அது இப்போது முடியாது. ஏனென்றால் தற்போதைய சூழலில் நான் எனது சொந்த வாழ்க்கைக்காக நேரம் ஒதுக்க முடியாத அளவிற்கு பிஸியாக இருக்கிறேன். என்னுடைய பெற்றோரிடம் கூட பேச நேரம் இல்லை. இந்த நிலையில் சினிமாவில் அதிக கவனம் செலுத்தும் எண்ணத்தில் இருப்பதால் சூட்டிங் லொகேஷன் தான் எனது சந்தோசம்.

ஆகையால் எனது தொழிலை செய்ய துணையாக இருக்கும் பெற்றோர் மற்றும் ஆதரவு கொடுக்கும் ரசிகர்களையும் நான் எப்போதும் மறக்கமாட்டேன் என்று கூறி உள்ளார். நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் விஜய், அஜித் போன்ற பல முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.

Also Read: அதிக சம்பளம் வாங்கும் 7 நடிகைகள்.. நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இவ்வளவு வித்தியாசமா

இதனால் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்து ஒரு ரவுண்டு வந்தார். ஆனால் இவர் சமீப காலமாக தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை. கடைசியாக இவர் தமிழில் ஆக்சன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு மூன்று வருடங்கள் கடந்த நிலையில் இவர் தமிழ் சினிமாவை தவிர்த்து விட்டு தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் இவரை ரசிகர்கள் இன்னும் மறக்காமல் இருக்கின்றனர்.

Also Read: 7 வருடங்கள் ஆகியும் மறக்கவில்லை.. உருகிப்போய் ட்வீட் போட்ட தமன்னா

Trending News