புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ஜேசன் சஞ்சய்க்கு லைக்காவை விட தூண் போல் இருக்கும் உறவு.. விஜய், SAC-ஐ தாண்டி அரண் போல் காக்கும் மனிதர்

Jason Sanjay: தளபதி  விஜய்யின் வாரிசான ஜேசன் சஞ்சய் தன்னுடைய படத்திற்கு ஹீரோவை தேர்வு செய்துவிட்டார். இந்த லிஸ்டில் கவின், ஹரிஷ் கல்யாண், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்டோர் இருந்தாலும் அவர்களை எல்லாம் ரிஜெக்ட் செய்துவிட்டு மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானை தான் தன்னுடைய படத்திற்கு கதாநாயகனாக ஜேசன் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

இப்பொழுது ஜேசன் எடுக்கும் படத்திற்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. லைக்கா நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கிறது. ஆனால் இப்பொழுது லைக்காவிற்கு பண பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆனா ஜேசன் சஞ்சய்யை கவலைப்படாதே என தூண் போல் அவரை தூக்கி விட்டிருக்கிறது ஒரு உறவு.

தளபதி விஜய்யின் மாமனார் லண்டனில் பெரிய பிசினஸ் மேன். ஒருவேளை லைக்கா போனாலும் நிச்சயம் ஜேசன் சஞ்சய்-யின் அம்மாவழி தாத்தா அவருக்கு அரண் போல் நிற்கிறார். இதனால் இப்போது அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன்னுடைய படத்தை  தரமாக எடுப்பதில் தான் கவனம் செலுத்துகிறார்.

Also Read: புது மாற்றத்தை கையில் எடுக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. மகளிர் தினத்தில் பெண்களுக்கு கொடுத்த அங்கீகாரம்

ஜேசன் சஞ்சய் எடுக்கும் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் 

அதுமட்டுமல்ல ஜேசன் சஞ்சய்யின் முதல் படமே லைக்கா தயாரிப்பிலா! என பலரும் ஆச்சரியப்பட்டனர். ஆனால் இந்த வாய்ப்பு விஜய் மூலமோ அல்லது SAC மூலமோ ஜேசன் சஞ்சய்க்கு கிடைக்கவில்லை. விஜய்யின் மனைவி சங்கீதாவும் லைக்கா நிறுவனர் சுபாஸ்கரனும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் ஜேசன் சஞ்சய்க்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் இப்போது லைக்கா, பண பிரச்சனையில் இருந்தாலும் அவருடைய படத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சங்கீதாவின் தந்தை பார்த்துக் கொள்வார். இதை தான் ‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்’ என்பார்கள். தன்னுடைய பேரனுக்காக எத்தனை கோடியை வேண்டுமானாலும் வாரி இறைக்க சங்கீதாவின் அப்பா தயாராக இருக்கிறார். அப்புறம் என்ன ஜேசன் சஞ்சய் பட்டையை கிளப்ப வேண்டியதுதான். 

Also Read: எந்த பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்கும் கோட் படக்குழு.. விஜய்யை மெர்சல் ஆக்கிய வெங்கட் பிரபு

Trending News