திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சின்ன பிள்ளைத்தனமா பட்டத்துக்கு அலையற ஆளு இல்ல.. மறைமுகமாக தாக்கி பேசிய பரத்

Actor Bharath: இளம் வயதிலேயே சினிமாவிற்கு நுழைந்த பரத், அவருடைய நடிப்பிலும் நடனத்திலும் பல ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவர் நடித்த படமான காதல் படம் இன்னும் வரை பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஒரு படம் தான் இவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படமாக இருக்கிறது.

இதற்குப் பிறகு எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் ஒரு சில படங்கள் வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்து தொடர்ந்து தோல்வியை மட்டுமே கொடுத்தது. ஆனாலும் தன்னை முன்னிலைப்படுத்தி காட்ட வேண்டும் என்பதற்காக சினிமாவை விடாமல் கேரியரில் படாத பாடுபட்டு வருகிறார்.

Also read: 50-வது படத்தில் உச்சகட்ட நடிப்பைக் காட்டிய பரத்.. பதைபதைக்க வைத்த லவ் ட்ரெய்லர் இதோ!

அப்படிப்பட்ட இவர் தற்போது இவருடைய 50வது படமான லவ் படத்தில், வாணி போஜன் உடன் சேர்ந்து நடித்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் மூலம் மறுபடியும் இவருடைய கேரியருக்கு கம்பேக்காக இருக்கும் என்று அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார்.

தற்போது இப்படத்தின் பிரமோஷன் சம்பந்தமாக பல நிகழ்ச்சிகளில் பரத் மற்றும் வாணி போஜன் ஜோடியாக கலந்து வருகிறார்கள். அதில் தொகுப்பாளர் ஒருவர் இவரிடம் ஆரம்பத்தில் உங்களுக்கு சின்ன தளபதி பட்டம் கொடுத்திருந்தார்கள். ஆனால் அது தற்போது இல்லாமல் இருக்கிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வியை முன்னுறுத்தி வைத்திருக்கிறார்.

Also read: சிக்ஸ் பேக் வைத்து பிரயோஜனம் இல்லாத 5 நடிகர்கள்.. தொடர் தோல்விகளை கொடுத்து வரும் காதல் பரத்

அதற்கு அழகாக சரியான பதிலை கொடுத்திருக்கிறார். அதாவது பட்டத்துக்கு ஆசைப்படுவதெல்லாம் சின்ன பிள்ளைத்தனமாக இருக்கிறது. அதற்கு ஏற்ற ஆளு நான் கிடையாது. அத்துடன் யாருக்கு என்ன பட்டம் போய் சேரணுமோ, அது கண்டிப்பாக மக்களே கொடுப்பார்கள் என்று கூறி இருக்கிறார்.

ஆனால் பரத் கூறியது சாதாரணமாக இவர் விஷயத்தை மட்டுமே எடுத்து சொல்லாமல், நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்கிப் பேசியது போல் இருக்கிறது. ஏன் என்றால் தற்போது சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பலபேர் போட்டி போடும் நிலையில், விஜய்யின் ரசிகர்கள் அப்பட்டமாகவே சில விஷயங்களை செய்து வருகிறார்கள். அதற்காகத்தான் இவர் மொத்தமாக பதிலடி கொடுத்திருக்கிறார். எது எப்படியோ பரத் இந்தப் படத்தின் மூலம் வெற்றி அடைவார் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: இருக்கும் இடம் தெரியாமல் போன விஷால், பரத்.. புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட பரிதாபம்

Trending News