வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

15 படங்கள் நடித்தும் பிரயோஜனம் இல்ல.. கிடைத்த வாய்ப்பை தட்டி பறித்த தனுஷ்

தனுஷின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படத்திற்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. தற்போது வாத்தி, கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் தனுஷ் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் இளம் நடிகர் ஒருவருக்கு கிடைத்த வாய்ப்பை தனுஷ் தட்டிப் பறித்துள்ளார். சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹரிஷ் கல்யாண் அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

Also read:சிம்புவுடன் கூட்டணி போடும் தனுஷ்.. டைரக்டர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

அதைத்தொடர்ந்து அவர் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இளன் இயக்கத்தில் வெளிவந்த அந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பிக் பாஸ் புகழ் ரைசா நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா அந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த ஓமணப்பெண்ணே, கசடதபற போன்ற திரைப்படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. இதனால் அவர் எப்படியாவது ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுத்து விட வேண்டும் என்று நல்ல கதைகளுக்காக காத்திருந்தார்.

Also read:சூப்பர் ஸ்டாரை சந்தோஷப்படுத்திய தனுஷ்.. பதிலுக்கு ரஜினி கொடுக்கும் சர்ப்ரைஸ்

ஆனால் ஆரம்ப காலத்தில் ஏனோ தானோ என்று கதைகளை தேர்வு செய்து நடித்திருந்ததால் தற்போது இவருக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. கிட்டத்தட்ட 15 படங்களுக்கு மேல் நடித்தும் இவருக்கு ஒரு வெற்றிப் படம் கூட அமையவில்லை என்பதுதான் பரிதாபம்.

இந்நிலையில் இவர் மீண்டும் இயக்குனர் இளன் இயக்கும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் சமீப காலமாக இவருக்கு கிடைக்கும் தோல்வியை பார்த்து தற்போது அந்த வாய்ப்பு தனுசுக்கு சென்று இருக்கிறது. இதனால் விரக்தி அடைந்த ஹரிஷ் கல்யாண் தற்போது கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகும் எண்ணத்தில் இருக்கிறார். சமீபத்தில் கூட இவர் தன்னுடைய திருமண அறிவிப்பை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also read:புது வாழ்க்கையை தொடங்க போடும் மாஸ்டர் பிளான்.. பழசை மறந்தாலும் எதையும் மாற்றாத தனுஷ்- ஐஸ்வர்யா

Trending News