வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கோபிக்கு தரமான சவுக்கடி கொடுத்த பாக்யா.. இனிமேதான் சம்பவம் இருக்கு

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது விறுவிறுப்பான கதை களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. எப்போதுமே கோபி பேச்சுக்கு பேச்சு நான் உழைத்து சம்பாதித்து கட்டிய வீடு இது என சொல்லிக்கொண்டே இருப்பார். வீட்டை விட்டு வெளியேறும் போது கூட பாக்யா 40 லட்சம் பணத்தை நான் தருகிறேன் என்று கூறினார்.

இந்த சூழலில் ராதிகாவை திருமணம் செய்து கொண்டு கோபி படாதபாடு பட்டு வருகிறார். காலையில் ஒரு காபி குடிப்பதற்கு கூட பலமுறை கேட்ட பின்பு தான் ராதிகா போட்டு கொடுக்கிறார். இப்போதாவது பாக்யாவின் அருமை கொஞ்சம் கொஞ்சமாக கோபிக்கு புரியவரும்.

Also Read :இருக்கிறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்ட கோபி.. கடைசியில இப்படி ஆயிடுச்சு

இந்நிலையில் கோபியின் கல்யாணத்திற்கு பாக்யா சமைத்து இருந்தார். இனிமேல் உள்ள எல்லா சமையல் காண்ட்ராக்ட் பாக்யாவுக்கு தான் கிடைக்கும் என மேனேஜர் வாக்கு கொடுத்துள்ளார். மேலும் அன்று சமைத்த சமையலுக்கான முழுத் தொகையும் பாக்யாவுக்கு கொடுத்து விட்டார்.

பாக்யா இனிமேல் எல்லா பணவரத்தினைகளையும் போன் மூலமாகவே செய்ய வேண்டும் என்பதால் எழில் மற்றும் ஜெனி இடம் இதை கற்றுக் கொள்கிறார். தன்னுடன் வேலை பார்க்கும் பெண்களுக்கும் சம்பளத்தை ஃபோனிலேயே போட்டு விடுகிறார். மறுபுறம் கோபி தனது நண்பனை பார்த்து பேசுகிறார்.

Also Read :கிளைமேக்ஸை நோக்கி பாரதி கண்ணம்மா.. கடைசி நேரத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்

புதுசா கல்யாணம் பண்ண வாழ்க்கை எப்படி போகுது என கோபியின் நண்பன் கேட்க நல்லா போகுது என்று கோபி சொல்லுகிறார். அப்போது கோபியின் அக்கவுண்டில் 40,000 கிரெடிட் ஆகி உள்ளது. இதைப் பார்த்து கோபி அதிர்ச்சி அடைகிறார். உடனே பாக்யா கோபிக்கு போன் செய்து 4 லட்சத்தில் 40 ஆயிரம் அனுப்பி உள்ளேன் என கூறுகிறார்.

உங்களுடைய முழு கடனையும் சீக்கிரமா அடச்சிடுறேன் என்ற கூறுகிறார். இவளுக்கு என்ன திமிரு என கோபி மனதுக்குள்ளயே நினைத்துக் கொள்கிறார். இனிமேல்தான் கோபிக்கு தரமான சம்பவம் காத்திருக்கிறது. ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட ராதிகாவிடம் கெஞ்ச உள்ளார்.

Also Read :கோபி அங்கிள் உங்க நிலைமையை பார்த்தால் ரொம்ப கேவலமா இருக்கு.. பொண்டாட்டி அருமை புரியுதா?

Trending News