புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய்யின் கடைசி 3 ஹீரோயின்கள்.. ஃபேர்வெல் கொடுக்க தயாரான வினோத், தளபதி 69 கதை இதுதான்

Thalapathy 69: விஜய் நடிப்பில் கடந்த வாரம் கோட் வெளியாகி 300 கோடியை தாண்டி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த வாரம் பெரிய அளவில் படங்கள் எதுவும் வெளிவராத நிலையில் இந்த வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை அடுத்து அவருடைய கடைசி படமான தளபதி 69 விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது. இந்நிலையில் எச் வினோத் இயக்கும் இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று கசிந்துள்ளது.

ஏற்கனவே ஒரு விழா மேடையில் வினோத் விஜய்யை இயக்கப் போவதாக கூறியிருந்தார். அதேபோல் இப்படம் நீங்கள் எதிர்பார்ப்பது போல் முழு அரசியல் படமாக இருக்காது எனவும் கூறியிருந்தார். அந்த வகையில் தளபதி 69 ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாக இருக்கிறதாம்.

விஜய் படத்தில் இணைந்த 3 ஹீரோயின்கள்

இதில் இடையிடையே சில அரசியல் குறியீடுகள் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை, துணிவு வரிசையில் இப்படமும் ஆடியன்சை என்ஜாய் செய்ய வைக்கும் திரில்லர் வகையறாவை சேர்ந்தது தான்.

மேலும் இப்படத்தில் மூன்று ஹீரோயின்கள் இணைந்துள்ளனர். அதன்படி விஜய்க்கு சரியான ஜோடி என நாம் ரசித்துப் பார்த்த சிம்ரன் இப்படத்தில் இணைந்துள்ளார். அவருடைய கடந்த படங்களில் திரிஷா, சினேகா ஆகியோர் ஜோடி போட்ட நிலையில் ஆல் டைம் பேவரைட் இடை அழகி விஜயின் கடைசி படத்தில் இணைந்திருக்கிறார்.

அதே போல் அவருடன் அதிக படங்களில் இணைந்து நடித்த சமந்தாவும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். அவரை தொடர்ந்து இன்றைய இளைஞர்களின் கனவு கன்னியான மமிதா பைஜூவும் நடிக்க இருக்கிறார்.

மேலும் சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். அதேபோல் ஏ ஆர் ரகுமான் அல்லது அனிருத் இசையமைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர். ஆக மொத்தம் வினோத் விஜய்க்கு தரமான ஒரு ஃபேர்வெல் பார்ட்டியை தளபதி 69 மூலம் கொடுக்க இருக்கிறார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

தளபதி 69 படத்தின் கதை இதுவா.?

Trending News