வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

Ajith: ஆரம்பிக்கலாமா, வேகமெடுக்கும் குட் பேட் அக்லி.. அஜித்துக்கு ஜோடியாகும் 3 ஹீரோயின்கள்

Ajith: அஜித்தின் விடாமுயற்சிக்கு காத்திருந்து ரசிகர்கள் சோர்ந்து போய் இருக்கின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக குட் பேட் அக்லி பட அறிவிப்பு வெளிவந்தது.

ஆனால் அதன் பிறகு எந்த அப்டேட்டும் வராமல் இருந்த நிலையில் தற்போது சில செய்திகள் கசிந்துள்ளது. அதன்படி நாளை படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

இதில் அஜித் பட தலைப்புக்கு ஏற்றவாறு மூன்று குணங்கள் கொண்ட மனிதராக நடிக்கிறார். அது 3 கதாபாத்திரங்களாகவும் இருக்கலாம். இல்லையென்றால் ஒருவருக்குள் மூன்று குண நலன்கள் இருக்கும் கேரக்டராகவும் இருக்கலாம்.

சர்ப்ரைஸ் கொடுக்கும் அஜித்

மேலும் இதில் சிம்ரன், மீனா, எஸ் ஜே சூர்யா உட்பட பல பிரபலங்கள் நடிக்க இருக்கின்றனர். இதில் தற்போது பிரபலமாக இருக்கும் ஒரு ஹீரோயினும் இணைய உள்ளாராம்.

ஆனால் அது யார் என்ற தகவல் மட்டும் ரகசியமாக இருக்கிறது. இப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் ஆதிக் முதல் ஷெட்யூலில் பாடல் மற்றும் சண்டை காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார்.

அதில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் இருப்பார். இது தவிர மற்றொரு சர்ப்ரைஸ் தோற்றமும் இருக்கிறது. ஆனால் விடாமுயற்சி சூட்டிங் முடிந்த பிறகு தான் அதற்கான ஒர்க் அவுட்டை அவர் ஆரம்பிப்பார்.

இப்படியாக பயங்கர திட்டத்துடன் குட் பேட் அக்லி வேகமெடுத்துள்ளது. இதனால் ரசிகர்களுக்கு பயங்கர கொண்டாட்டம் தான். ஆக மொத்தம் இவ்வளவு மாத காத்திருப்புக்கு பலனாக அஜித் டபுள் ட்ரீட் கொடுக்க இருக்கிறார்.

Trending News