வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பிக்பாஸ் 8 டைட்டிலை தட்டுவாரா முத்துக்குமரன்.? டஃப் கொடுக்கும் 5 ஸ்ட்ராங் போட்டியாளர்கள்

Biggboss 8: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சி சுவாரசியத்தோடு நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் கொஞ்சம் டல்லடித்தாலும் இப்போது போட்டியாளர்கள் விளையாட்டை புரிந்து கொண்டு களமிறங்க தொடங்கியுள்ளனர்.

ஆனால் வீட்டுக்கு வருவதற்கு முன்பே இந்த விளையாட்டின் சாராம்சத்தை புரிந்து கொண்டு இலக்கை நோக்கி ஓடுபவர் என்றால் அது முத்துக்குமரன் தான். ஆரம்பத்தில் இவருடைய பேச்சும் செயலும் சிறு எரிச்சலை கொடுத்தது என்னவோ உண்மைதான்.

ஆனால் இப்போது அவருடைய விளையாட்டு யுக்தி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. அவருடைய பேச்சும் பல நேரங்களில் சக போட்டியாளர்களை கார்னர் செய்து மடக்குவதும் விளையாட்டின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

இதனால் இறுதி போட்டி வரை இவர் வருவதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது. அதை தொடர்ந்து இவருக்கு போட்டியாக இன்னும் ஐந்து போட்டியாளர்களும் வீட்டுக்குள் இருக்கின்றனர். அது பற்றி இங்கு விரிவாக காண்போம்.

இதில் தீபக் ஆடும் ஆட்டம் நேர்மையாக இருக்கிறது. யாரிடம் எப்படி பேச வேண்டும் விளையாட்டை எப்படி எடுத்து சென்றால் தனக்கு நல்லது என அவர் புரிந்து கொண்டு செயல்படுத்தி வருகிறார். அதனால் இவரும் இறுதிவரை வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

பிக்பாஸ் 8 டைட்டில் யாருக்கு சொந்தம்.?

இவருக்கு அடுத்தபடியாக ஜாக்லின் கடுமையான போட்டியாளராக இருக்கிறார். பெண்கள் அணியை பொறுத்தவரையில் இவர்தான் கொஞ்சம் ஆக்டிவாக இருக்கிறார். ஆரம்பத்திலிருந்து தன்னுடைய கருத்துக்களை முன் வைப்பதில் தொடங்கி தப்பு செய்தாலும் கூட அதை துணிச்சலோடு எதிர்கொண்டு வருகிறார்.

அடுத்ததாக விஷால் கொஞ்சம் கொஞ்சமாக ஆடியன்ஸை கவர்ந்து வருகிறார். இவருடைய விளையாட்டு யுக்தியும் சிறப்பாக இருக்கிறது. அதே போல் ரஞ்சித் தொடர்ந்து நிகழ்ச்சியில் நீடிப்பார் என்பதிலும் சந்தேகம் இல்லை.

ஆரம்பத்தில் இவர் சில வாரங்கள் கூட தாக்குப் பிடிக்க மாட்டார் என்று தான் தோன்றியது. அதற்கு அவருடைய வயதும் ஒரு காரணம். ஆனால் தற்போது வரை அவர் தன்னுடைய விளையாட்டை சிறப்பாக விளையாடி வருகிறார்.

அடுத்ததாக ஆர் ஜே ஆனந்தியும் கவனத்துடன் விளையாடி வருகிறார். சில நேரங்களில் அவர் தில்லுமுல்லு செய்வது போல் தோன்றுகிறது. ஆனாலும் எங்கு அடித்தால் எங்கு தோற்பார்கள் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

அதனாலேயே இவர் ரூல்ஸை ஃபாலோ செய்து ஆண்களை மடக்குகிறார். அந்த வகையில் இந்த ஐந்து போட்டியாளர்களும் முத்துவுக்கு டஃப் கொடுத்து வருகின்றனர். இவர்களில் ஒருவர் இந்த சீசன் டைட்டிலை அடிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

Trending News