வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வசூல்ல இந்த 5 இயக்குனர்கள் தான் டாப்பு.. இவங்க டச்சே இல்லாமல் அசுர வளர்ச்சியில் அஜித்

Ajith: அஜித் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்தாலும் அவருடைய கவனம் அனைத்தும் நடிப்பில் மட்டும் தான் இருக்கும். அதைத் தவிர பொது நிகழ்ச்சி, இன்டர்வியூ, ப்ரோமோஷன் போன்ற விஷயங்களில் இன்ட்ரஸ்ட் இல்லாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கக்கூடியவர். அப்படிப்பட்ட இவரிடம் சொல்லிக்கும்படியான நிறைய திறமைகள் தனிப்பட்ட முறையில் இருக்கிறது.

அதனால் நடிப்புக்கு அப்பாற்பட்ட அந்த விஷயங்களிலும் கவனம் செலுத்தி அவருடைய திருப்தியை அடைந்து கொள்வார். இதற்கிடையில் அவர் படங்களில் நடிக்கும் போது லாபம் சம்பாதிக்க வேண்டும். மற்றவர்களுடன் முந்த வேண்டும் என்ற ஆசையில் எந்த ஒரு படங்களிலும் நடிப்பதில்லை. அவருக்கு தேவை ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான்.

அதனால் தான் என்னமோ வசூலில் வாரி குவிக்கும் இயக்குனர்களிடம் எந்த வித டச்சும் இல்லாமல் தனியாகவே ஒதுங்கி இருக்கிறார். ஆனாலும் தனிக்காட்டு ராஜாவாக நடித்து அசுர வளர்ச்சி அடைந்து ரசிகர்களின் மனதில் இவருக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அப்படி இவர் எந்த வித டச்சே இல்லாமல் இருக்கும் ஐந்து இயக்குனர்கள் யார் என்பதை பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் காப்பி கதையை வைத்து எடுத்தாலும் அதில் தொடர்ந்து வெற்றியை பார்த்து வரும் இயக்குனர் அட்லி. இவர் ஷாருக்கான் மற்றும் விஜய்க்கு ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அதிலும் சமீபத்தில் வெளிவந்த ஜவான் படம் கிட்டத்தட்ட 1100 கோடிக்கு மேல் வசூலை பெற்றிருக்கிறது. அடுத்ததாக பிரம்மாண்டத்துக்கு பெயர் வாங்கிய இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த 2.0 தாறுமாறான வெற்றியை கொடுத்து 200 கோடிக்கு மேல் வசூலை பெற்றது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் 600 கோடிக்கு மேல் வசூலை பெற்று சூப்பர் ஸ்டாருக்கு வசூலை வாரி குவித்தது. அதே மாதிரி மணிரத்தினம் இயக்கக் கூடிய படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவிடும். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் 480 கோடி வசூலை பெற்றது.

இதே மாதிரி லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படம் 400 கோடி வசூலை பெற்றிருக்கிறது. அத்துடன் தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை எடுத்து முடித்து இருக்கிறார். இந்தப் படமும் ஆயிரம் கோடி வசூலை பெற்று விடும் என்பது உறுதியாகத் தெரிகிறது. இப்படி இந்த இயக்குனர்கள் எடுக்கும் படங்கள் வசூலில் பட்டைய கிளப்பினாலும் அஜித் இவர்கள் பக்கம் தல வச்சு கூட படுக்காமல் தனிக்காட்டு ராஜாவாக நடித்து வெற்றி பெற்று வருகிறார்.

Trending News