வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித்துக்கு தலைவலி கொடுத்த 5 படங்கள்.. தயாரிப்பாளர் செய்த துரோகத்தில் இருந்து காப்பாற்றிய சம்பவம்

பொதுவாக அஜித் அனைவரிடமும் இன்முகத்துடன் பழகக் கூடியவர். ரசிகர்கள் முதல் சக நடிகர்கள் வரை அனைவருக்கும் இவரை பிடிக்கும். அதனாலேயே இவரை ஜென்டில்மேன் என கூறுவது உண்டு. அப்படிப்பட்ட இவருக்கு சில திரைப்படங்கள் தலைவலியாக அமைந்திருக்கிறது. அதிலும் சில தயாரிப்பாளர்களால் இவர் படாத பாடு பட்டிருக்கிறார். அது குறித்து இங்கு விளக்கமாக காண்போம்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்: ராஜீவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. மம்முட்டி, தபு, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த இப்படம் அஜித்திற்கு பேர் சொல்லும் ஒரு படமாக இருக்கிறது. ஆனால் இதன் படப்பிடிப்பின் போது அவருக்கு காலில் அடிபட்டிருந்தது. அதனால் அவர் நடக்க முடியாமல் வீல் சேரில் வரும் அளவுக்கு கஷ்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also read: அடுத்தடுத்து பறிபோன பட வாய்ப்பால் வெளியேறும் விக்கி-நயன்.. வேறு வழியில்லாமல் எடுத்த அதிரடி முடிவு

சிட்டிசன்: சரவண சுப்பையா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் தயாரித்திருந்தது. இதன் படப்பிடிப்பு சமயத்தில் அஜித் உடல் ரீதியாக சில பிரச்சினைகளை சந்தித்தார். அதன் காரணமாக அவருக்கு ஆபரேஷனும் செய்யப்பட்டிருந்தது. மேலும் அவருடைய உடல் எடையும் சற்று அதிகரிக்க தொடங்கியது. இப்படி கஷ்டமான சூழ்நிலையிலும் அவர் இந்த படத்தை முடித்துக் கொடுத்தார்.

அசல்: சரண் இயக்கத்தில் சிவாஜி ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் போதிய வரவேற்பு பெறவில்லை. மேலும் வெளிநாட்டில் இதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது தயாரிப்பாளர் சிறு கருத்து வேறுபாட்டின் காரணமாக படக்குழுவை அம்போ என விட்டுவிட்டு இந்தியா திரும்பினார். பின்னர் அஜித் தான் அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டு அனைவரையும் சென்னை அழைத்து வந்திருக்கிறார். அந்த வகையில் இந்த படம் அவருக்கு பெரும் பிரச்சனையாக அமைந்தது.

Also read: குழந்தை நட்சத்திரம் என நினைத்தால் கவர்ச்சி தூக்கலாக நடிக்கும் 5 நடிகைகள்.. நயன்தாரவையே தூக்கி சாப்பிட்ட அனிகா

நான் கடவுள்: பாலா இயக்கத்தில் ஆர்யாவின் நடிப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. ஆனால் முதலில் இந்த படத்தில் அஜித் தான் நடிக்க இருந்தார். இது பலருக்கும் தெரியும். ஆனால் தயாரிப்பாளர் உடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அவர் இந்த திரைப்படத்திலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

ரெட்: சிங்கம் புலி இயக்கத்தில் எஸ் எஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. தயாரிப்பாளர் இப்படத்தை வேறு விதமாக கையாண்டதால் பெரும் நஷ்டத்திற்கு ஆளானார். அது தவிர அஜித்துக்கும் சில நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தது. அந்த வகையில் இந்த படத்தால் அவர் சில மன உளைச்சலுக்கும் ஆளானார்.

இப்படி இந்த படங்கள் அனைத்துமே அஜித்துக்கு பெரும் தலைவலியாக தான் இருந்திருக்கிறது. அதனாலேயே அவர் இப்போது தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படத்திற்கும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

Also read: பிரபு இடத்தை பிடித்த ஜெயராமின் 5 படங்கள்.. தேவயானி, மந்த்ராவை மயக்கிய கோபாலகிருஷ்ணன்

Trending News