சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நல்ல கதைக்காக காத்திருக்கும் 5 ஹீரோக்கள்.. திறமை இருந்தும் பொழைக்க தெரியல!

சினிமாவில் சில ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகி அவர்களுக்கு நல்ல பெயரை பெற்று கொடுக்கும். அதன் பிறகு அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதைகள் சில தோல்விகளையும் கொடுத்து விடும். அப்படி திறமை இருந்தும் நல்ல கதை அமையாமல் கஷ்டப்படும் ஐந்து ஹீரோக்களை பற்றி இங்கு காண்போம்.

விதார்த்: பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மைனா திரைப்படம் தான் இவருக்கு நல்ல பாராட்டுக்களை பெற்றுக் கொடுத்தது. அதற்குப் பின் இவர் தேர்ந்தெடுத்த கதைகள் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பை கொடுக்கவில்லை. அதனால் இவர் நடித்த பல திரைப்படங்கள் தோல்விகளை சந்தித்தது.

இருப்பினும் தன்னுடைய திறமையை நிரூபிக்கும் வகையில் இவர் நடித்த சில திரைப்படங்கள் இவருக்கு பாராட்டுகளை பெற்றுக் கொடுத்தாலும் வாய்ப்புகள் ஒன்றும் கிடைக்கவில்லை. சமீபத்தில் இவர் நடித்த பயணிகள் கவனிக்கவும் திரைப்படமும் சரிவர போகாத நிலையில் தற்போது இவர் நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

விக்ராந்த்: நடிகர் விஜய்யின் தம்பி என்ற அறிமுகத்தோடு சினிமாவிற்குள் நுழைந்த இவருக்கு பெரிய அளவில் ஹிட் படங்கள் எதுவும் அமையவில்லை. அதனால் ஒரு கட்டத்திற்கு பிறகு இவர் கேரக்டர் ரோல்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அதுவும் இவருக்கு கை கொடுக்காத நிலையில் வில்லனாகவும் நடித்துப் பார்த்தார். அதற்கு வரவேற்பு கிடைத்தாலும் பட வாய்ப்புகள் ஒன்றும் சரியாக அமையாத காரணத்தினால் இவர் தற்போது நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

ஷ்யாம்: ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலேயே ஏராளமான பெண் ரசிகைகளை கவர்ந்த இவர் அதற்கு பின் ஏராளமான திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் இவர் நடித்த இயற்கை உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது இவர் விஜய்யுடன் நடித்துக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தை தான் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

பிரசன்னா: பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர் நாணயம், அஞ்சாதே ஆகிய பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் வீட்டுல தோல்வி படங்களை கொடுத்திருக்கும் இவர் ஹீரோவாக ஜெயிக்க முடியாத நிலையில் தற்போது வில்லன், குணச்சித்திரம் என்று கலக்கிக் கொண்டிருக்கிறார். மேலும் தன் திறமையை நிரூபிக்கும் வகையிலான கதைக்காக இவர் தற்போது காத்துக் கொண்டிருக்கிறார்.

சிபிராஜ்: நடிகர் சத்யராஜின் மகனான இவர் ஆரம்பகாலத்தில் தன் அப்பாவுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு சோலோ ஹீரோவாக இவர் நடித்த திரைப்படங்கள் இவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. அதனால் இவர் வில்லன் கேரக்டர்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் நல்ல ஒரு கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மாயோன் திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Trending News