வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

Horror Movies: பயத்தில் உச்சா போக வைக்கும் 5 ஹாரர் படங்கள்.. நீங்க தான் தைரியமான ஆளாச்சே, முடிஞ்சா தனியா பாருங்க!

Horror Movies: திகில் படங்களை பார்ப்பது ஒரு த்ரில் தான். அதிலும் இரவு நேரங்களில் நண்பர்களின் கூட்டத்துடன் சேர்ந்து பயந்து பயந்து பேய் படங்களை பார்ப்பவர்கள் இங்கு ஏராளமானோர் உண்டு.

அதேபோன்று ஹாரர் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். அப்படி நம்மை பயத்தில் உறைய வைக்கும் 5 திகில் படங்களை பற்றி இங்கு காண்போம்.

சினிஸ்டர்

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் பயத்தில் நெஞ்சை உறைய வைக்கும். கதை எழுதும் ஹீரோ தன் குடும்பத்துடன் கொலைகள் நடந்த வீட்டிற்கு குடி போவார். அங்கு நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள் பயங்கரமாக இருக்கும். இதன் தமிழாக்கம் யூட்யூப் தளத்தில் உள்ளது.

இன்சைடியஸ்

2010 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் ஹீரோ தன் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் புது வீட்டிற்கு குடி பெயர்வார். அங்கு சென்ற பிறகு அவர்களுடைய மகன் கோமா நிலைக்கு தள்ளப்படுவார். ஆனால் உண்மையில் அவருடைய ஆத்மா ஒரு ஆவியின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

அதிலிருந்து அந்த குடும்பம் எப்படி நீண்டது என்பதுதான் கதை. பார்ப்பதற்கு படு பயங்கரமாக இருக்கும் இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும்.

இட்

2017 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் குழந்தைகளை தின்னும் கொடூர கோமாளி பேயை பற்றியது. 27 வருடங்களுக்கு ஒரு முறை வெளிவரும் பேயிடம் குழந்தைகள் மாட்டிக்கொண்டு படும் அவஸ்தை திகிலாக இருக்கும். இதன் தமிழாக்கம் யூடியூப் தளத்தில் உள்ளது.

தி ரிங்

2002ம் ஆண்டு வெளிவந்த இப்படம் பார்ப்பதற்கு ரொம்பவும் பயமாக இருக்கும். சபிக்கப்பட்ட ஒரு வீடியோவை பார்ப்பவர்களுக்கு ஏழு நாட்களுக்குள் ஒரு போன் கால் வரும். அதன் பிறகு அவர்கள் இறந்து விடுவார்கள்.

அதற்கு காரணமான பெண் பேயின் ஆட்டம் படம் பார்ப்பவர்களை சீட்டின் நுனிக்கு வர வைக்கும். அந்த அளவுக்கு இப்படம் மிரட்டலாக இருக்கும்.

டெட் சைலன்ஸ்

ஒரு தம்பதிகளுக்கு பரிசாக வரும் பொம்மைக்குள் பேய் இருக்கும். அதை பார்த்து யாரெல்லாம் பயப்படுகிறார்களோ அவர்களை அது கொன்று விடும். பயங்கர திகில் கலந்த காட்சிகளுடன் இருக்கும் இப்படத்தை பார்த்த பலர் நிஜத்தில் கூட இந்த பொம்மையை பார்த்ததாக சொல்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் ஒரு வாரத்திற்கும் மேலாக தூக்கம் வராமல் தவித்துள்ளார்களாம். அப்படிப்பட்ட இப்படம் திகில் பட பிரியர்களுக்கு இது ஏற்ற படம்.

Trending News