வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஓடிடி பக்கமே வராத 5 படங்கள்.. லால் சலாம் ஹார்ட் டிஸ்க் மறுபடியும் காணாம போயிடுச்சோ!

Lal Salaam: இப்போது ஓடிடி தளங்களின் ஆதிக்கம் தான் நிறைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் தான் இது உச்சம் பெற்றது. அப்போது தியேட்டர்களில் படங்கள் வெளிவராத நிலையில் நேரடியாக ஓடிடியில் டாப் ஹீரோக்களின் படங்கள் வெளிவந்தன.

அதைத்தொடர்ந்து இப்போது தியேட்டரில் வெளியாகி ஒரு மாதத்திற்குள்ளாகவே அனைத்து படங்களும் டிஜிட்டலுக்கு வந்து விடுகிறது. அதுமட்டுமின்றி பெரும்பாலான ரசிகர்கள் ஓடிடியில் படம் பார்ப்பதை தான் விரும்புகின்றனர்.

அந்த வகையில் ஓடிடி பக்கமே வராத ஐந்து படங்களை பற்றி காண்போம். இதில் லால் சலாம் படத்தை தான் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கேமியோ ரோலில் நடித்த படம் இந்த வருட தொடக்கத்தில் வெளிவந்தது.

ஆனால் ஏகப்பட்ட அலப்பறை செய்த இப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது. இதற்கு முக்கிய காரணம் ஐஸ்வர்யா தான் என ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ரோஸ்ட் செய்தனர். உடனே அவர் படம் சம்பந்தப்பட்ட ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டது.

டிஜிட்டலுக்கு வராத படங்கள்

அதனால் சில காட்சிகளை திரும்பவும் ஷூட் செய்ய முடியவில்லை என சாக்கு போக்கு சொன்னார். ஆனாலும் லால் சலாம் பெரும் அடி வாங்கியது. அதையடுத்து ஓடிடிக்கு எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் இப்போது வரை வெளிவரவில்லை.

இதற்கு அடுத்ததாக எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான பொம்மை கலவையான விமர்சனங்களை சந்தித்தது. அந்த படமும் இன்னும் டிஜிட்டலுக்கு வரவில்லை. மேலும் பகத் பாஸில் நடிப்பில் பெரும் வரவேற்பை பெற்ற படம் தான் ஆவேசம்.

150 கோடியை வசூலித்த இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது. ஆனால் இதன் தமிழ் வெர்ஷன் இன்னும் வெளியிடப்படவில்லை. அடுத்ததாக பிரித்விராஜ் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான மலையாள படம் கடுவா.

சில சர்ச்சைகளை சந்தித்த இப்படம் அமேசான் பிரைமில் உள்ளது. இதன் ஹிந்தி வெர்ஷன் ஹாட்ஸ்டார் தளத்தில் இருக்கிறது. ஆனால் தமிழில் கிடையாது. மேலும் 2022 ஆம் ஆண்டு சைக்கோ திரில்லர் பாணியில் வெளிவந்த படம் தான் அஷ்டகர்மா.

சஸ்பென்ஸ் கலந்த இப்ப படமும் ஓடிடியில் வெளியாகவில்லை. இப்படி பல படங்கள் டிஜிட்டலுக்கு வராமல் இருக்கிறது. அது அனைத்தும் எப்போது வெளியாகும் போரடிக்கும் நேரங்களில் பார்க்கலாம் என ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் லால் சலாம் ஹார்ட் டிஸ்க் மறுபடியும் காணாம போயிடுச்சோ என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தியேட்டரில் அடி வாங்கிய லால் சலாம் ஓடிடிக்கு வருமா.?

Trending News