சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நீங்க எல்லாம் எதுக்கு நடிக்க வரீங்க.? அவமானங்களை வைத்தே சாதித்து காட்டிய 6 ஹீரோக்கள்

சினிமாவை பொறுத்தவரை ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு கருத்து இருக்கிறது. நல்ல கலர், அழகு போன்றவை இருந்தால் தான் மக்கள் அவர்களை ஹீரோவாக ஏற்றுக் கொள்வார்கள். அப்படி இல்லை என்றால் இதெல்லாம் ஒரு மூஞ்சா, எதற்கு நடிக்க வருகிறீர்கள் என்று பல விமர்சனங்கள் அந்த நடிகருக்கு கிடைக்கும்.

இன்று முன்னணி ஹீரோக்களாக இருக்கும் பல நடிகர்களும் ஆரம்ப காலத்தில் இதுபோன்ற பல அவமானங்களை சந்தித்திருக்கிறார்கள். ஆனாலும் அந்த அவமானங்களையே வெற்றி படிக்கட்டுகளாக மாற்றி இன்று ரசிகர்களை கவர்ந்துள்ள ஆறு நடிகர்களை பற்றி இங்கு காண்போம்.

பகத் பாசில்: மலையாள நடிகராக பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக இருக்கிறார். அதிலும் விக்ரம் திரைப்படத்தின் மூலம் அவருடைய மார்க்கெட் வேகமாக உயர்ந்துள்ளது.

ஆனால் ஆரம்பத்தில் அவரை எல்லாம் ஹீரோவாக ஏற்றுக் கொள்ள மக்கள் விரும்பவில்லை. இதனால் சில விமர்சனங்களையும் அவர் சந்தித்தார். ஆனால் அந்த அவமானங்களை எல்லாம் அவர் தன்னுடைய திறமையான நடிப்பால் கடந்து இன்று முன்னணி நடிகராக மாறி இருக்கிறார்.

தனுஷ்: ஒல்லியான உடல்வாகுடன், சிறு பையன் போல் இருக்கும் இவரை ஹீரோவாக ஏற்றுக் கொள்ள மக்கள் தயங்கினார்கள். மேலும் இவர் குறித்து ஏகப்பட்ட கிண்டல்களும் அப்போது எழுந்தது. ஆனால் அதெல்லாம் ஒரு காலம் வரையில்தான்.

தன்னுடைய உணர்ச்சி பூர்வமான நடிப்பால் அவர் இன்று பாலிவுட், ஹாலிவுட் என்று படு பிரபலமாகி இருக்கிறார். மேலும் தேசிய விருது உட்பட பல விருதுகளையும் பெற்று அவர் இன்று முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.

விஜய்: ஒரு இயக்குனரின் மகனாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான இவருக்கு எதிராக பல கருத்துக்கள் எழுந்தது. இதெல்லாம் ஒரு மூஞ்சா, இவரை எப்படி ஹீரோவாக ஏற்றுக் கொள்ள முடியும் என்றெல்லாம் அப்போது பேசினார்கள்.

ஆனால் விஜய் அந்த அவமானங்களை எல்லாம் பார்த்து சோர்ந்து விடாமல் தொடர்ந்து தன்னுடைய கடினமான உழைப்பால் இன்று ஒரு மாஸ் நடிகராக மாறி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் கோலிவுட்டின் வசூல் நாயகனாகவும் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் தற்போது ஒரு அசைக்க முடியாத இடத்தை பெற்றிருக்கிறார் என்பது தான் உண்மை.

துல்கர் சல்மான்: பிரபல நடிகர் மம்முட்டியின் மகனான இவர் மலையாள திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் ஆரம்பத்தில் இவருடைய படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இருப்பினும் இவர் தன்னுடைய விடாமுயற்சியால் இன்று ஒரு முன்னணி ஹீரோவாக மாறி இருக்கிறார்.

பிரபுதேவா: குரூப் டான்ஸராக இருந்த இவர் தற்போது டான்ஸ் மாஸ்டர், ஹீரோ, இயக்குனர் என்று பன்முக திறமை கொண்டவராக இருக்கிறார். காதலன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவரை பலரும் கலாய்த்தனர். இவர் ஹீரோ மெட்டீரியல் இல்லை என்று பலரும் வெளிப்படையாகவே பேசினர். ஆனால் பிரபுதேவா அவற்றையெல்லாம் தாண்டி இன்று கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் ஒரு முக்கிய பிரபலமாக மாறி இருக்கிறார்.

சத்யராஜ்: ஆரம்ப காலகட்டத்தில் வில்லனாக நடித்து வந்த இவர் ஒரு காலத்திற்குப் பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால் வில்லனாக பார்த்து வந்த இவரை ஹீரோவாக ஏற்றுக் கொள்ள மக்கள் விரும்பவில்லை. அதனால் இவர் நடித்த சில திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தது.

ஆனால் போகப் போக இவருடைய வில்லத்தனமான வசனங்களும், நக்கலும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அந்த வகையில் பல திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

Trending News