வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போன 5 ஹீரோக்கள்.. ஒரு வெற்றி கிடைக்காதா என போராடும் ஜீவா

பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர் அந்தஸ்தில் இருந்த ஹீரோக்கள் பலரும் இப்போது இருக்கும் இடமே தெரியாமல் இருக்கின்றனர். அவர்கள் நடிக்கும் சில படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை. இதனால் எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்று அவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றார். அந்த வகையில் ஒரு வெற்றிக்காக போராடும் 6 ஹீரோக்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

விஷ்ணு விஷால்: ராட்சசன், எஃப் ஐ ஆர் உள்ளிட்ட சில திரைப்படங்கள் இவருக்கு பாராட்டுக்களை பெற்று கொடுத்தது. ஆனாலும் இவருக்கு முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை. அதனால் அவர் ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

Also read:பாக்ஸ் ஆபிஸை கலக்கும் 5 படங்கள்.. தரமான சம்பவம் செய்த திருச்சிற்றம்பலம்

ஜீவா: ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் சமீப காலமாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இதனால் இப்படி ஒரு நடிகர் இருக்கிறார் என்பதையே மக்கள் மறந்து விட்டனர். தற்போது ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு இவர் இரண்டு, மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சாந்தனு: வாரிசு நடிகராக சினிமாவுக்குள் நுழைந்த இவர் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. இவர் நடித்த சில திரைப்படங்களும் தோல்வி படங்களாக அமைந்தது. அதனால் இவர் சில வருடங்கள் எந்தப்படத்திலும் நடிக்காமல் இருந்தார். தற்போது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் எப்படியாவது முன்னணி நடிகராக மாறிவிட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

Also read:தமிழ் சினிமா கிட்டத்தட்ட ஒதுக்கிய 6 நடிகர்கள்.. ஒரே பாட்டில் இளசுகளை சுண்டி இழுத்த ராம்ஜி

ஸ்ரீகாந்த்: தமிழ் சினிமாவில் ஆரம்ப கட்டத்தில் சாக்லேட் பாய் இமேஜுடன் வலம் வந்த இவருக்கு இப்போது பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடைசியாக 2019 ஆம் ஆண்டு மிருகா திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் அதன் பிறகு தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது தமிழில் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்களில் நடித்து வருகிறார்.

ஜெய்: நடிகர் சுப்ரமணியபுரம், சென்னை 28 போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு பட்டாம்பூச்சி திரைப்படத்தின் மூலம் வில்லனாக களமிறங்கி இருக்கும் இவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் மூலம் அவர் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற வெறியுடன் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also read:அதிக பட்ஜெட்டில் உருவான 5 தமிழ் படங்கள்.. தயாரிப்பாளர்களை வெச்சு செஞ்ச ஷங்கர், மணிரத்னம்

Trending News