சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கோடீஸ்வரரை மாப்பிள்ளையை பிடித்த 6 நடிகைகள்.. புள்ள குட்டி இருந்தாலும் பரவால்லன்னு 2-வதா வாக்கப்பட்ட மயிலு

6 Actresses Who Got Millionaire Grooms: ஹீரோயின்கள் வாய்ப்பு குறைந்து விட்டால் உடனே வெளிநாட்டு மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள். காலம் காலமாக இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அப்படி புளியங்கொம்பாக பார்த்து கல்யாணம் செய்த ஆறு நடிகைகள் பற்றி இங்கு காண்போம்.

ஸ்ரீதேவி: தமிழ் ரசிகர்களால் மயிலு என செல்லமாக அழைக்கப்படும் இவர் பாலிவுட்டிலும் வெற்றி கொடி நாட்டினார். அழகும் திறமையும் கொண்ட இவருக்கு எத்தனையோ ஹீரோக்கள் வலை வீசினார்கள். ஆனால் இவர் திடீரென போனிகபூரை திருமணம் செய்து கொண்டு அதிர்ச்சி கொடுத்தார்.

இத்தனைக்கும் ஏற்கனவே அவர் திருமணமாகி இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவாக இருந்தார். ஆனாலும் அவர் கோடீஸ்வரர் என்ற காரணத்தினாலேயே ஸ்ரீதேவி அவரை திருமணம் செய்து கொண்டதாக இன்றும் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் புள்ள குட்டி இருந்தாலும் பரவாயில்லை என்று இந்த தயாரிப்பாளருக்கு இரண்டாவதாக வாக்கப்பட்டார் நம்ம ஊரு மயிலு.

அசின்: தமிழில் விஜய், அஜித் என டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இவர் கஜினி ஹிந்தி ரீமேக் மூலம் பாலிவுட் சென்றார். அங்கு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. நடித்த படங்களும் வரவேற்பு பெறவில்லை. அதனால் மைக்ரோ மேக்ஸ் இணை நிறுவனர் ராகுலை திருமணம் செய்து கொண்டு அம்மணி செட்டிலாகி விட்டார்.

Also read: நிறைமாத கர்ப்பிணியாக அமலா பால் செய்யும் அலப்பறை.. முதல் கணவரை வெறுப்பேற்ற வெளியிட்ட புகைப்படம்

குட்டி ராதிகா: இயற்கை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கும் இவர் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் பல வருட வயது வித்தியாசம் உண்டு. ஆனாலும் பணம் புகழுக்காக இவர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரீமாசென்: கௌதம் மேனன் அறிமுகப்படுத்திய இவர் விஜய், விக்ரம் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைந்து போனதால் ஷிவ் கரன்சிங் என்ற கோடீஸ்வர மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

ஹன்சிகா: பப்ளி நடிகையாக தமிழில் ஒரு ரவுண்டு வந்த இவர் சிம்புவுடன் காதலில் இருந்தார். ஆனால் அது பிரேக்கப்பில் முடிந்த நிலையில் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். அதன் பிறகு வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் தொழிலதிபர் சோஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ரகுல் ப்ரீத் சிங்: தீரன் அதிகாரம், அயலான் படங்களில் நடித்திருக்கும் இவர் தெலுங்கிலும் வெகு பிரபலமானவர். கடந்த வாரம் தயாரிப்பாளரும் கோடீஸ்வரருமான ஜாக்கி பக்னானியை பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களாகவே காதல் பறவைகளாக திரிந்த இவர்கள் தற்போது திருமண உறவில் இணைந்துள்ளனர்.

Also read: ரகுல் ப்ரீத்தி சிங், ஜாக்கி பக்னானியின் சொத்து மதிப்பு.. கணவனை விட இத்தனை கோடி அதிகமா?

Trending News