வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

2023-ஐ மிரட்டி விட்ட 7 சர்ச்சைகள்.. ஆண்டவருக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்து நின்ற பிரதீப்

7 Controversies In 2023: இப்பொழுதுதான் 2023 தொடங்கியது போல் இருக்கிறது ஆனால் வருடத்தின் இறுதி மாதத்தில் இருக்கிறோம். புத்தாண்டை வரவேற்பதற்கு முன்பாக இந்த வருடம் சோசியல் மீடியாவை தெறிக்கவிட்ட 7 சிறப்பான சம்பவங்களை பற்றி காண்போம்.

அஜித் – விக்னேஷ் சிவன்: அஜித்தை இயக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இயக்குனரின் கனவாக இருக்கிறது. அதை ஏகே 62 மூலம் சுலபமாக கைப்பற்றிய விக்னேஷ் சிவன் சில காரணங்களால் கைநழுவ விட்டார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலயே என்ற கதையாக அவரிடமிருந்து வாய்ப்பு பறிக்கப்பட்டது.

இந்த வருட தொடக்கத்தை கலங்கடித்த சர்ச்சைகளில் இதுதான் முக்கியமானது. அதை தொடர்ந்து பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு அஜித்தின் 62 ஆவது படம் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சியாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

காக்கா – கழுகு சர்ச்சை: சூப்பர் ஸ்டார் எது பேசினாலும் அது பல சமயங்களில் சர்ச்சையில் முடிந்துவிடும். அப்படித்தான் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் அவர் சொன்ன காக்கா, கழுகு கதை கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஹுக்கும் பாடல் விஜய்யை மறைமுகமாக தாக்கியிருந்தது.

அதை தொடர்ந்து இந்த கதையும் அவருக்கான பதிலடி என பேசப்பட்டதில் சோசியல் மீடியாவே அதிர்ந்தது. ஆனால் இது எதுவும் படத்தை பாதிக்கவில்லை. ஜெயிலர் 600 கோடியை தாண்டி வசூலித்து வெற்றி வாகை சூடியது குறிப்பிடத்தக்கது.

Also read: ஆண்டவரால கூட இந்த சீசனை காப்பாத்த முடியல.. 70 நாளாகியும் ஒரு ஆணியும் புடுங்காத பிக்பாஸ்

சிவகார்த்திகேயன் – இமான்: ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்த இருவரும் தற்போது இரு துருவங்களாக இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் சிவகார்த்திகேயனுக்கும் இமானின் முன்னாள் மனைவிக்கும் இருந்த உறவு தான். இது கிசுகிசுவாக சலசலக்கப்பட்ட நிலையில் இமான் ஒரு பேட்டியில் நாசுக்காக அதை வெளிப்படுத்தி இருந்தார்.

சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று அவர் கூறிய ஒரு விஷயம் கடும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பல சினிமா விமர்சகர்களும் இதற்கு எதிரான ஆதாரங்கள் இருப்பதாக பகீர் கிளப்பினர். இதனால் சிவகார்த்திகேயன் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு கெட்ட பெயரை சம்பாதித்தார்.

பருத்திவீரன் பஞ்சாயத்து: இப்போது சோஷியல் மீடியாவில் இந்த சர்ச்சை தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 17 வருடங்களுக்கு முன்பாக நடந்த இந்த விவகாரம் மீண்டும் கார்த்தியின் 25வது பட விழா மூலம் வெளிவந்திருக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட அமீருக்கு ஆதரவாக தான் பல பிரபலங்கள் பேசி வருகின்றனர். இதனால் சிவக்குமார் குடும்பம் மிகப்பெரிய அளவில் டேமேஜை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

விஜய் – சங்கீதா விவாகரத்து: சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து வந்த இவர்கள் விவாகரத்து செய்து விட்டதாக ஒரு செய்தி மீடியாவையே கலக்கியது. இதற்கு முக்கிய காரணம் கீர்த்தி சுரேஷ் என்று பேசப்பட்டது தான் சர்ச்சையாக வெடித்தது. அதை தொடர்ந்து லியோவில் திரிஷா விஜய்க்கு ஜோடியானதும் பிரச்சனை வேறு ரூட்டுக்கு பயணித்தது.

இந்த இருவரால்தான் சங்கீதா விஜய்யை தற்போது வரை பிரிந்து இருக்கிறார். சமீபகாலமாக விஜய் பல நிகழ்ச்சிகளுக்கு தனியே வந்து கொண்டிருப்பதே அதற்கு சாட்சி. இதை பல பிரபலங்கள் வெளிப்படையாக சொன்னாலும் அதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

Also read: அன்றே கணித்த மணிவண்ணன்.. பிக்பாஸால் வெளிவந்த கமலின் உண்மையான அம்பி நிறம்

கமல் – பிரதீப் ரெட் கார்டு விவகாரம்: இப்போது சோசியல் மீடியாவின் ஹாட் செய்தி என்றால் அது பிக்பாஸாக தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு அது பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பிரதீப்புக்கு கொடுத்த ரெட் கார்டு தான். சரியாக விசாரிக்காமல் கமல் செய்த இந்த விஷயம் பெரும் பரபரப்பை கிளப்பியது.

எந்த அளவுக்கு என்றால் கமலை கீழ் இறக்கி பிரதீப்பை கொண்டாடும் அளவுக்கு இருந்தது. அதேபோன்று ஆண்டவருடைய பிறந்த நாளன்று அவரையே பிரதீப் ஓவர் டேக் செய்து சோசியல் மீடியா பிரபலமாக மாறினார். இப்படி இந்த விவகாரத்தில் பிரதீப் விஸ்வரூபம் எடுத்து நின்றது கமலுக்கான பெரும் பின்னடைவாக அமைந்தது. இப்போதும் இந்த சர்ச்சை அவருக்கு எதிராக தான் இருக்கிறது.

சீமான் – விஜயலட்சுமி: நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்திருந்தார். தன்னை காதலித்து ஏமாற்றிய அவர் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்தது பேரதிர்வை ஏற்படுத்தியது அதை தொடர்ந்து வழக்கு, விசாரணை, மருத்துவமனை பரிசோதனை என இந்த சர்ச்சை மீடியாவை கலக்கியது. ஆனால் ஒரு கட்டத்தில் விஜயலட்சுமி என்னால் போராட முடியாது என்று கூறி சொந்த ஊருக்கே மூட்டை முடிச்சை கட்டினார்.

Trending News