திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கேஜிஎஃப் 3ம் பாகத்தில் நடிக்க போகும் ஹாலிவுட் ஹீரோக்கள்.. அதிரப் போகும் உலக சினிமா

சில வருடங்களுக்கு முன்பு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் இந்திய சினிமாவின் பெருமையாக பார்க்கப்பட்டது. இப்போது அதையெல்லாம் ஓரம் கட்டி ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு திரைப்படமாக இருக்கிறது கேஜிஎப் 2.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டான்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான இந்த திரைப்படம் இப்போது வரை திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழ் ரசிகர்கள் இந்தப் படத்தை வெறித்தனமாக கொண்டாடுகின்றனர்.

கன்னட மொழிக்கு ஈடாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் இப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை படைத்துள்ளது. இன்னும் இந்த படத்தின் தாக்கத்திலிருந்து வெளிவராத ரசிகர்கள் அடுத்த பாகம் எப்போது என்று கேட்க ஆரம்பித்துள்ளனர்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக யாஷ் கேஜிஎஃப் படத்தின் மூன்றாம் பாகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தார். அதனால் ரசிகர்கள் அது குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கே ஜி எப் 3 குறித்த ஒரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இதன் மூன்றாவது பாகம் உலகமே வியக்கும் அளவுக்கு தரமான கதையாக இருக்கும் என்றும், அதில் பிரபல ஹாலிவுட் நடிகர்கள் நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்கு பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிகிறது.

அந்த வகையில் கே ஜி எப் 3 யாரும் எதிர்பார்க்காத அளவில் உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் அது இந்திய சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாக இருக்கும்.

Trending News