திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வழுக்கை தலையன் என அசிங்கப்படுத்தப்பட்ட நடிகர்.. அஜித், ஷாலினி போல் இணைந்த ஜோடி

Ajith-Shalini: ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக மாறிய பிரபலங்களில் முக்கியமானவர்கள் தான் அஜித் ஷாலினி ஜோடி. சிறந்த நட்சத்திர தம்பதிகளாக இருக்கும் இவர்கள் திருமணம் ஆகி பல வருடங்கள் கழிந்த நிலையிலும் அந்த காதல் மாறாமல் அதே அன்புடன் தான் இருக்கின்றனர்.

இத்தனைக்கும் அஜித்தின் தோற்றத்தை வைத்து பல கேலி, கிண்டல்கள் வெளிவந்திருக்கிறது. அதிலும் அவருடைய உடல் எடை பற்றி தான் அதிக விமர்சனங்கள் வரும். ஆனால் அதையெல்லாம் கடந்து நிற்கிறது இவர்களுடைய காதல். அப்படித்தான் நஸ்ரியா, பகத் பாசில் ஜோடியும் சில உருவ கேலிக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

Also read: 41 வயதில் ரத்தினவேலின் சொத்து மதிப்பு.. மாமன்னால் எகிரிய பகத் பாசிலின் மார்க்கெட்

அந்த வகையில் முன்னணி நடிகையாக பிசியாக இருந்தபோதே நஸ்ரியா பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த ஜோடி திருமண பந்தத்தில் இணைந்தது. ஆனால் இவர்களுடைய ஜோடி பொருத்தத்தை பார்த்த பலரும் பல விதமாக பேசினார்கள்.

அதிலும் பகத் பாசிலின் தலையில் முடி இல்லாததை ஒரு குறையாக சொல்லி வழுக்கை தலையனை ஏன் திருமணம் செய்து கொண்டாய் என்று கூட நஸ்ரியாவிடம் கேள்வி எழுப்பினார்கள். மேலும் இருவருக்கும் இடையே இருந்த வயது வித்தியாசமும் பெரிதாக பேசப்பட்டது. ஆனால் நஸ்ரியா அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.

Also read: தோல்வியை ஒத்துக்கொண்ட பகத் பாசில்.. சரியான நெத்தியடி கொடுத்து வெளியிட்ட புகைப்படம்

தங்கள் திருமணத்தின்போது அவர் கூறிய ஒரே விஷயம் இதுதான். அதாவது 25 வயதில் திருமணம் செய்து கொள்ள நினைத்த நான் 19 வயதில் திருமணம் செய்து கொண்டேன். இதற்கு முக்கிய காரணம் பகத் மாதிரி ஒருவரை மிஸ் பண்ணி விடக்கூடாது என்பதற்காகத்தான் என அவர் நெத்தியடியாக கூறினார்.

இதுவே இவர்களுக்குள் இருக்கும் காதலை வெளிப்படையாக காட்டுகிறது. அதேபோன்று நஸ்ரியாவின் காதலுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் தான் பகத்தின் காதலும் இருக்கிறது. இப்படி ஒருவருக்கொருவர் அன்னோன்யமாக இருக்கும் இந்த தம்பதி இன்னொரு அஜித், ஷாலினி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also read: மாமன்னன் பட ஹீரோ உதயநிதியா, பகத் பாசிலா.? பாவம் மாரி செல்வராஜே கன்பியூஸ் ஆயிட்டாரு

Trending News