புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ரஜினி, விஜய் என எல்லோரையும் பொளந்துகட்டும் கே.ராஜன் இயக்கிய படங்களா இவை?

சமூக ஊடகங்களில் எதாவது ஒரு வீடியோ கே.ராஜன் பேசிய வீடியோ வைரலாகும். நடிகர்களின் சம்பளம், தயாரிப்பு செலவு என வெளிப்படையாகப் பேசுவார். விஜய், ரஜினி என யாராக இருந்தாலும் அவர்களின் செயல்களை பகிரங்கமாகவே விமர்சிப்பதால் ரசிகர்களுக்கு இவர் பரீட்சயம். இவர் இயக்கிய மற்றும் தயாரித்த படங்கள் பற்றி பார்க்கலாம்.

K. ராஜன் இயக்கிய & தயாரித்த படங்கள் லிஸ்ட்

நம்ம ஊரு மாரியம்மா: 1983ல் சுரேஷ் நடித்த பிரம்மச்சாரிகள் படம் மூலம் தயாரிப்பாளராக சினிமாவில் அறிமுகமானார் கே. ராஜன். அதன்பின் இயக்குனர் செந்தில் நாதனின் தங்கமான தங்கச்சி படத்தில் எழுத்தாளராக பணியாற்றினார். அந்த அனுபவத்தில், 1991 ல் சரத்குமார், நிழல்கள் ரவி நடித்த நம்ம ஊரு மாரியம்மா படத்தை இயக்கினார்.

தொடர்ந்து தனது மகன் பிரபுகாந்தை ஹீரோவாக்கி அவள் பாவம் படத்தை தயாரித்தார் அவர். இப்படத்தை எம்.கே. அருந்தவராஜா இயக்கியிருந்தார். இப்படம் அப்போது கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

டபுள்ஸ்: 2000-ல் கே.ராஜன் தயாரிப்பில், பிரபுதேவா , மீனா, சங்கீதா நடிப்பில், பாண்டியராஜ் எழுதி இயக்கிய டபுள்ஸ் படத்தை இயக்கினார். இப்படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

2001 ல் அவரது தயாரிப்பில், ஆர்.பார்த்திபன், ரஹ்மான், தேவயானி, காவேரி நடிப்பில் உருவான படம் நினைக்காத நாளில்லை. இப்படத்தை ஏ.எல்.ராஜா இயக்கினார். தேவா இசையமைத்திருந்தார். இப்படமும் கலவையான விமர்சனங்கள் பெற்றது.

உணர்ச்சிகள்: மீண்டும் இயக்குனராகி 2006 ல் உணர்ச்சிகள் என்ற படத்தை இயக்கினார் கே.ராஜன். இதில், சிம்ரன், அபிதா, அபிநய ஸ்ரீ ஆகியோர் நடித்திருந்தனர். குணால், ராதா ரவி இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். இப்படமும் தியேட்டரில் ரிலீஸாகி கலவையான விமர்சனங்கள் பெற்றது.

இயக்கம் தயாரிப்பு மட்டுமின்றி பல படங்களில் கே.ராஜன் நடித்துள்ளார். மைக்கேல் ராஜ், பகிரி, நடிகை, துணிவு , பகாசூரன் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News