வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இறுதி கட்டத்தை எட்டிய பிக்பாஸ் 7.. ஓட்டிங்கில் முதல் 3 இடத்தை பிடித்தது இவர்கள் தான்

Biggboss 7 Top 3 Finalist: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எண்டு கார்டு போடும் நேரம் வந்துவிட்டது. அதன்படி இறுதி வாரத்தில் மாயா, அர்ச்சனா, தினேஷ், மணி, விஷ்ணு, விஜய் வர்மா ஆகியோர் இருந்தனர். இதில் விஜய் வர்மா நேற்று எவிக்ட் செய்யப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து மீதம் இருக்கும் ஐந்து போட்டியாளர்களில் முதல் மூன்று இடத்தை அர்ச்சனா, மணி, தினேஷ் ஆகியோர் பிடித்திருக்கின்றனர். அதில் அர்ச்சனாவுக்கு தான் எப்போதுமே முதலிடம் என்பது நாம் அறிந்த கதை தான்.

இதற்காக சோசியல் மீடியாவில் பல டீம்கள் இறங்கி வேலை பார்த்து வருகின்றனர். இதை பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே போட்டியாளர்கள் பேசிய சம்பவமும் நடந்தது. அந்த வகையில் தற்போது ஓட்டிங் நிலவரத்தில் அர்ச்சனா 51% வாக்குகளை பெற்று முன்னணியில் இருக்கிறார்.

Also read: பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் யாருன்னு எப்பவோ முடிவு பண்ணியாச்சு.. இதைவிட அசிங்கம் வேற எதுமே இல்ல

அதற்கு அடுத்ததாக மணி 15% வாக்குகளை பெற்றிருக்கிறார். அவருக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் இருக்கும் தினேஷுக்கு 11% வாக்குகள் கிடைத்திருக்கிறது. இப்படியாக இந்த மூவரும் டாப் 3 போட்டியாளர்களாக இருக்கின்றனர்.

அதேபோல் நான்காவது இடம் மாயாவுக்கு கிடைத்திருக்கிறது. அதை அடுத்து டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்த விஷ்ணு ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளார். இந்த டிக்கெட்டை பெறுபவர்கள் ஒருபோதும் டைட்டிலை வெல்ல மாட்டார்கள் என்ற ராசி இப்போது இவருக்கும் பொருந்தியுள்ளது.

Also read: நோ சூடு, நோ சொரணை.. மாயாவுக்கு ஜால்ரா தட்டும் மிக்சர் பார்ட்டி

அதன்படி மாயாவை டைட்டில் வின்னர் ஆக்க சில சதி வேலைகள் நடந்து வருவதாக செய்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஓட்டுக்களின் அடிப்படையில் அர்ச்சனா தான் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அதனாலேயே பிக்பாஸ் டைட்டில் யாருக்கு என்ற பரபரப்பு இப்போது அதிகமாகியுள்ளது.

voting-bb
voting-bb

Trending News