OTT Price Top 4 Movies: ஓடிடி தளங்கள் வந்த புதிதில் தியேட்டர் உரிமையாளர்கள் ரொம்பவும் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு படம் தியேட்டரில் வெளியாகி 28 நாட்கள் கழித்து டிஜிட்டலுக்கு வரும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இப்போதெல்லாம் இரண்டு வாரம் தியேட்டரில் ஒரு படம் ஓடினாலே சாதனை தான். அதிலும் சிறு பட்ஜெட் படங்களை ரசிகர்கள் வீட்டிலேயே பார்க்க தொடங்கிவிட்டனர்.
இதனால் லாபம் பார்த்து வரும் ஓடிடி நிறுவனங்கள் டாப் ஹீரோக்களின் படங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன. அதிலும் ஏகப்பட்ட போட்டி நடக்கிறது.
பல கோடிகளை கொடுத்து பிரம்மாண்ட படங்களை வாங்கும் நிறுவனங்களும் உண்டு. அதன்படி அதிக விலைக்கு வியாபாரமான நான்கு படங்களை பற்றி இங்கு காண்போம்.
அதிக விலைக்கு வியாபாரமான படங்கள்
இதில் முதலிடத்தில் பாகுபலி நாயகனின் கல்கி படம் தான் இருக்கிறது. Netflix மற்றும் அமேசான் ப்ரைம் இரண்டிலும் இது ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது.
இதன் டிஜிட்டல் பிசினஸ் 375 கோடியாகும். இதை அடுத்து யாஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் 2 அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது.
இதை அந்த நிறுவனம் 320 கோடிக்கு வாங்கியிருந்தது. மூன்றாவது இடத்தில் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படம் டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்தில் இருக்கிறது.
இதன் வியாபாரம் 300 கோடியாகும். அடுத்ததாக தற்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் புஷ்பா 2 உள்ளது.
இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix வாங்கியுள்ளது. அதை அந்த நிறுவனம் கடும் போட்டிகளுக்கு நடுவில் 275 கோடிக்கு வாங்கி இருக்கிறது.
இதில் மூன்று படங்கள் தெலுங்கு பிரபல ஹீரோக்களுடையது. அதிலும் பாகுபலி நாயகனுக்கு கடும் மவுசு இருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.