சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

செப்டம்பர் 20ம் தேதி கூட்டமாக வரும் 7 படங்கள்.. ஒவ்வொன்னும் வேற ரகம், இதுல உங்க சாய்ஸ் எது.?

September 20 Release Movies: இந்த மாதம் தொடக்கத்திலேயே ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக இருக்கிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் வரும் 5ம் தேதி வெளியாகிறது. இதற்கான பிரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அதேபோல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் பிரேம்ஜி, வைபவ், வெங்கட் பிரபு என ஒவ்வொருவரும் புதுப்புது தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அதேபோல் சர்வதேச அளவில் படத்திற்கான ஆர்வமும் இருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க செப்டம்பர் மாதம் ஏகப்பட்ட தமிழ் படங்கள் வெளிவர இருக்கிறது. அதில் இருபதாம் தேதி மட்டும் ஏழு படங்கள் கூட்டமாக தியேட்டருக்கு படையெடுக்கின்றன. அதை பற்றி இங்கு காண்போம்.

அந்த வகையில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் லப்பர் பந்து செப்டம்பர் 20 வெளியாகிறது. கிரிக்கெட்டை மையப்படுத்தி இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லரே வித்தியாசமாக இருந்தது.

செப்டம்பர் 20 ரிலீசாகும் படங்கள்

இதை அடுத்து சீனு ராமசாமி இயக்கத்தில் யோகி பாபுவின் கோழிப்பண்ணை செல்லதுரை வெளியாகிறது. அண்ணன் தங்கை உறவை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்த சதீஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் சட்டம் என் கையில் செப்டம்பர் 20 குறி வைத்துள்ளது.

திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இப்படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்ததாக சசிகுமாரின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி இருக்கும் நந்தன் படமும் 20ம் தேதி வெளியாகிறது. இதில் அவருடைய தோற்றமே வேற லெவலில் இருப்பது படத்திற்கான ஹைப்பாக உள்ளது.

மேலும் ஜீவா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் பிளாக் செப்டம்பர் 20 வெளியாகிறது. ஒரே இரவில் நடக்கும் திரில்லர் மற்றும் சயின்ஸ் சம்பந்தப்பட்ட கதைதான் இப்படம். அடுத்து ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி இருக்கும் கடைசி உலகப் போர் படமும் அதே நாளில் வெளியாகிறது.

அதைத்தொடர்ந்து காளி வெங்கட் நடிப்பில் உருவாகி இருக்கும் தோனிமா படமும் செப்டம்பர் 20 ரிலீஸ் ஆகிறது. இதில் அவர் கிரிக்கெட் ரசிகராக நடித்துள்ளார். இப்படியாக ஏழு படங்கள் ஒரே நாளில் வெளிவர இருக்கிறது. ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதை அமைப்பு. இதில் ஆடியன்ஸின் ஆதரவு எந்த படத்திற்கு என்பது விரைவில் தெரியவரும்.

ஒரே நாளில் நேருக்கு நேர் மோதும் 7 ஹீரோக்கள்

Trending News