ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஹாலிவுட் படங்களில் மிரள வைத்த 8 தமிழ் நடிகர்கள்.. அங்கேயும் முத்திரை பதித்த எம்என் நம்பியார்

பொதுவாக தமிழில் பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகள் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்வார்கள். அதில் சில தமிழ் நடிகர்கள் தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் உடன் சேர்த்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து அசத்தி இருக்கிறார்கள். அந்த வகையில் அவர்கள் தமிழ் சினிமாவின் பெருமையை வெளிநாட்டிலும் காட்டியிருக்கிறார்கள். அப்படி ஹாலிவுட்டில் முத்திரை பதித்த சில ஹீரோக்களை பற்றி காண்போம்.

இன்பர்நோ 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் நடிகர் மாதவன், ரவி என்ற கேரக்டரில் நடித்திருப்பார். அதாவது அவர் ஹீரோவுக்கு உதவி செய்யும் இன்டர்போல் ஏஜென்டாக இப்படத்தில் நடித்திருப்பார்.

தி ஜங்கிள் சயின்ஸ் சம்பந்தப்பட்ட இந்த திரைப்படத்தில் நடிகர் எம் என் நம்பியார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 1952 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த ஹாலிவுட் திரைப்படத்தில் அவர் ராணிக்கு உதவி செய்யும் மந்திரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

டிராப் செட்டி இந்த படத்தில் நெப்போலியன் மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது ஷூட்டிங்கில் இருக்கும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

டிராபிகல் ஹூட் 1993ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அப்போது கன்னட திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த பிரகாஷ்ராஜ் இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

பிளேவர்ஸ் தமிழில் காதல் ரோஜாவே என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை பூஜா குமார் அதன் பிறகு அதிகமாக ஹாலிவுட் திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார். இந்த ப்ளேவர்ஸ் திரைப்படம் அவருடைய முதல் ஹாலிவுட் திரைப்படம் ஆகும்.

தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் த பாகிர் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் இந்த திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் முத்திரை பதித்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தனுஷ் தி கிரே மேன் என்ற மற்றொரு ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பிளட் ஸ்டோன் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். இப்படம் பலரையும் கவர்ந்தது. அது மட்டுமல்லாமல் ஒரு நல்ல வசூலை பெற்று சூப்பர் ஸ்டாருக்கு பெருமை சேர்த்தது.

டெவில்ஸ் நைட் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர் நெப்போலியன் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அவர் கிட்டத்தட்ட 5 ஹாலிவுட் திரைப்படங்களில் இதுவரை நடித்திருக்கிறார். தற்போது மேலும் ஒரு திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Trending News