ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

யாரும் அறியாத சரத்பாபுவின் மறுபக்கம்.. இரண்டு மனைவிகள் இருந்தும் கிசுகிசுக்கப்படாத ஒரே நடிகர்

கடந்த இரண்டு நாட்களாகவே சரத் பாபுவை பற்றிய செய்திகள் தான் இணையம் முழுக்க நிறைந்து இருக்கிறது. இருக்கும்போது அவரின் அருமை தெரியாது என்றும், இறந்த பின்பு அவரின் புகழை பாடுவது வழக்கமாக தான் இருந்து வருகிறது. அந்த வகையில் சரத் பாபுவை பற்றி யாரும் அறியாத பல விஷயங்கள் தற்போது வெளியாகி வருகிறது.

அந்த வகையில் நமக்கு கிடைத்த சில நல்ல விஷயங்களை இப்போது பார்க்கலாம். ஆந்திராவில் பிறந்த சரத் பாபு அனைத்து மொழி படங்களில் நடித்தாலும் தமிழ் நாட்டை தான் தனது மூச்சாக நேசித்தார். அதனால் தான் இறக்கும் போது கூட கடைசியாக தனது சகோதரி இடம் இறுதிச் சடங்கை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Also Read : சரத்பாபுக்கு தயாரிப்பாளராக சம்பளம் போட்ட பயில்வான்.. குறை சொல்ல முடியாமல் கண்கலங்கிய சம்பவம்

மேலும் தமிழ்நாட்டில் சரத் பாபு கால் பதித்ததால் அவரிடம் எந்த மொழியில் பேசினாலும் தமிழில் மட்டும் தான் பதில் சொல்வாராம். அந்த அளவுக்கு தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டு மக்களின் மீது மரியாதை வைத்துள்ளார். சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்கள் பற்றி கிசுகிசு வருவது சர்வ சாதாரணம்தான்.

சரத் பாபு தனது சொந்த வாழ்க்கையில் இரண்டு திருமணம் செய்து கொண்டாலும் சினிமாவில் அவரைப் பற்றிய ஒரு கிசுகிசு கூட வந்ததில்லையாம். அந்த அளவுக்கு படப்பிடிப்பில் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்ளக் கூடியவர். அதுமட்டுமின்றி ஒருவரை பற்றி மற்றவரிடம் எப்போதுமே குறை கூற மாட்டாராம்.

Also Read : மரணப் படுக்கையில் சரத்பாபு வாங்கிய கடைசி சத்தியம்.. உயிர் பிரிந்தும் கண்கலங்க வைத்த எஜமான்

அனைவரிடத்திலுமே சிரித்த முகத்துடன் எப்போதும் புன்னகைத்துக் கொண்டே பேசக்கூடியவர் சரத்பாபு என அவரிடம் நெருங்கி பழகியவர்கள் கூறுகின்றனர். அவரிடம் எந்த கெட்ட பழக்கமும் இல்லையாம். சூப்பர் ஸ்டார் ரஜினியே சிகரெட் பிடிக்கும்போது அவரைப் பார்த்து விட்டால் தூர போட்டு விடுவாராம்.

தான் மட்டுமில்லாமல் தன்னை சுற்றி உள்ளவர்கள் மீது மிகுந்த அக்கறை காட்டக் கூடியவராக சரத் பாபு இருந்துள்ளார். மேலும் ஆர்கானிக் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை தான் சரத் பாபு உட்கொள்வாரம். தினமும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

அனைத்து இயக்குனர்களுக்கும் பிடித்த நடிகராக சரத்பாபு இருந்து மறைந்துள்ளார். இன்னும் இவரது புகழைப் சொல்ல வேண்டும் என்றால் ஒரு நாள் கூட பத்தாது என்று அவருடைய சுற்று வட்டாரத்தினர் கூறுகின்றனர். ஆனாலும் தன்னுடைய 71ஆவது வயதிலேயே சரத்பாபு இறப்பதற்கான காரணம் அவருக்கு மல்டிபிள் மைலோமா என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட இருந்தாராம்.

Also Read : நடிப்பில் சிகரம் தொட்ட சரத்பாபு.. மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Trending News