ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

நடிகைகளை பற்றி வரும் மோசமான விமர்சனம்.. ஆதங்கத்தை வெளிப்படுத்திய ராதிகா

Radhika Sarathkumar: வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலுமே கோலோச்சி இருந்தவர் தான் நடிகை ராதிகா. பாரதிராஜா கண்டெடுத்த ராதிகா மிகவும் துணிச்சலானவர். அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்கள் கூட மிகவும் வலிமையானதாக தான் இருக்கும்.

சமீபகாலமாக நடிகைகள் பற்றி மோசமான விமர்சனங்கள் இணையத்தில் அதிகம் பரவிக் கொண்டிருக்கிறது. ஒருமுறை சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் ராதிகா மற்றும் அவரது தாயார் பற்றி சில கருத்துக்களை முன் வைத்திருந்தார்.

இதனால் கடுப்பான ராதிகா நேருக்கு நேராகவே அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். சமீபத்தில் விகடன் நிகழ்ச்சியில் ராதிகா கலந்து கொண்ட நிலையில் முகம் தெரியாத நபர்கள் நடிகைகளை பற்றி அவதூறாக சொல்வதை கண்டிக்கும்படி பேசி இருந்தார்.

ராதிகா ஆதங்கத்துடன் பேசிய விஷயங்கள்

அதாவது தங்கள் நடிக்கும் படம் அல்லது கேரக்டர் பிடிக்கவில்லை என்றால் அதில் விமர்சிக்க உங்களுக்கு நிச்சயம் அதிகாரம் உண்டு. ஏனென்றால் பணம் செலவழித்து பார்க்கிறீர்கள். அதனால் அதைப் பற்றி பேச உங்களுக்கு உரிமை உண்டு.

இது தவிர என் குடும்பத்தை பற்றி பேச நீ யாரு? முகம் தெரியாமல் ஏதோ கண்டமேனிக்கு பேசினால், அதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டு அப்படியே முடங்கி விடுவோம் என்று நினைக்கிறார்கள். எங்களுக்கும் மனசு இருக்கிறது. ஆனால் நாங்கள் ஒரு மணி நேரத்தில் செய்யும் வேலையை உங்கள செய்ய முடியாது.

இது போன்று மோசமான கருத்துக்களால் எங்களது வளர்ச்சியையும் தடுக்க முடியாது. நாங்கள் சாதிப்பதற்காக அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஓடிக்கொண்டிருக்கிறோம். இதனால் அவரவர் வேலையை பாருங்கள் என ராதிகா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

துணிச்சலான நடிகை ராதிகா

Trending News