திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அடிமடியில் கை வைத்த தளபதி.. 2026 தேர்தலுக்கு இப்பவே போட்ட அடித்தளம்

Actor Vijay: விஜய்யின் கல்வி விருந்து நிகழ்ச்சி நடந்து கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் ஆகியும் அலை ஓயாமல் அடித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே விஜய் அரசியலுக்கு வர உள்ளார் என்ற செய்தி இணையத்தில் பரவி வந்தது. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கியிருந்தார்.

இந்த விழாவும் அரசியல் ஆகத்தான் பார்க்கப்படுகிறது. பொதுவாக பள்ளி குழந்தைகளுக்கு பரிசு வழங்குவது என்றால் மாவட்ட வாரியாக தான் கொடுப்பார்கள். ஆனால் விஜய் தொகுதிவாரியாக பிரித்து அதில் முதல் மூன்று இடங்களை பிடித்த குழந்தைகளுக்கு பரிசு வழங்கி உள்ளார். அரசியலுக்கு மட்டும் தான் தொகுதி என்று பிரிக்கப்படும்.

Also Read : இளைய தலைமுறைக்கு விஜய் சொன்ன 4 விஷயங்கள்.. செல்போனில் மூழ்கியவர்களை காப்பாற்றும் தளபதி

அடுத்ததாக ஒரு மிகப்பெரிய கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றால் அரசியல் கட்சிகளால் மட்டுமே முடியும். ஆனால் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் மாணவர்களை ஒன்று கூட்டி இதை சாதித்து காட்டியுள்ளார். அதுமட்டுமின்றி இப்போது 10 முதல் 12 வகுப்புகள் படித்து வரும் மாணவர்களின் வயது 15 இல் இருந்து 17 வரை இருக்கக்கூடும்.

இந்நிலையில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடக்க உள்ள தேர்தலில் இவர்கள் 18 வயது நிரம்பிவர்களாக இருப்பார்கள். ஆகையால் இவர்கள்தான் முதல் வாக்காளர்கள் என்பதை உணர்ந்த விஜய் பக்காவாக பிளான் போட்டு இந்நிகழ்ச்சியை நடத்தி உள்ளாராம். மேலும் அதே மேடையில் அரசியலைப் பற்றியும் பேசி இருக்கிறார்.

Also Read : எல்லாத்தையும் ஓரங்கட்டிய விஜய்.. 4 விஷயங்களுக்கு வழிவிடாமல் தளபதி தட்டி தூக்கிய பரபரப்பான மேடை

உங்க கையை வைத்தே கண்ணை குத்துவது போல பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்காதீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். ஒரு தொகுதிக்கு 15 கோடி கொடுக்கிறார் என்றால் அவர் எவ்வளவு சம்பாதித்து இருப்பார் என்பதை நன்றாக யோசியுங்கள் என்று அரசியல்வாதிகளின் அடி மடியிலேயே கை வைத்தார் தளபதி.

மேலும் உங்கள் பெற்றோர்களிடமும் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடாதீர்கள் என்று வலியுறுத்துங்கள் என விஜய் கூறியிருக்கிறார். இதன் மூலம் தற்போது உள்ள இளைஞர்களையும் தன் வசப்படுத்தி அவர்கள் மூலமாக பெற்றோர்களிடமும் ஆதரவு பெற முயற்சித்திருக்கிறார் விஜய். குறிப்பாக தேர்தல் வரும் நேரத்தில் தான் அரசியல்வாதிகள் தொகுதிக்கு நன்மைகள் செய்வார்கள்.

ஆனால் 2026-யை மனதில் வைத்து இப்போது மக்கள் மனதில் ஒரு நல்ல அரசியல் களத்தை உருவாக்குவேன் என்ற நம்பிக்கையை விஜய் கொடுத்து வருகிறார். பொதுவாக நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாதாரண விஷயமாக இருந்தாலும், விஜய்யின் இந்த வித்தியாசமான அணுகுமுறை மக்களுக்கு பிடித்திருக்கிறது.

Also Read : விஜய் மாணவ, மாணவிகளை தூண்டி விட்டுள்ளார்.. எம்ஜிஆர் உடன் ஒப்பிட்டு பேசி பரபரப்பு கிளப்பிய தயாரிப்பாளர்

Trending News