வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

ஈஸ்வரி நிலைமையை யோசித்து கோபிக்கு நோ சொல்லிய இனியா.. புருஷன் நினைப்பில் இருக்கும் பாக்யா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா என்னதான் தன்னுடைய குடும்பத்திற்காக எல்லா கஷ்டங்களையும் சுமந்து போராடி வந்தாலும் குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது ஒரு பிரச்சனையில் மாட்டி தவிக்கிறார். இப்படித்தான் அமிர்தா கணேஷ், மாலினி ஜெனி செழியன், அப்புறம் ஈஸ்வரி ஜெயில் என பல விஷயங்களில் பிரச்சனையை தீர்க்கும் விதமாக பாக்யா போராடினார்.

இதையெல்லாம் முடிந்த பிறகு சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அதையும் கெடுக்கும் விதமாக இனியா செய்த காரியம் எல்லாத்தையும் சொதப்பிவிட்டது. இனியா பப்புக்கு போயி பிரண்ட்ஸோட கூத்தடித்ததால் போலீஸ் வந்து அரெஸ்ட் பண்ண நிலைமைக்கு போய்விட்டது. இதை ராதிகா பார்த்து இனியாவை காப்பாற்றி பாக்கியாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் அளவிற்கு வார்த்தையாலே காயப்படுத்தி விட்டார்.

கோபியை எதிர்த்து பேசாமல் இருக்கும் பாக்கியா

இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த இனியாவிற்கு ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து அட்வைஸ் கொடுத்தார்கள். இந்த விஷயம் எல்லாம் கோபிக்கு தெரிந்த நிலையில் மறுநாள் பாக்யா வீட்டிற்கு வருகிறார். வந்ததும் பாக்கியாவிடம் இனியா விஷயத்தை பேசி நேத்து நடந்தது ஒன்னும் சாதாரண விஷயம் இல்லை. இவள் இனியாவை அக்கறை இல்லாமல் பார்த்துக்கிட்டதுக்கு தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்.

போதும் இனி இவள் கிட்ட என் மகள் இருந்தது. இனி இனியாவை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி இனியாவை கூப்பிடுகிறார். அப்பொழுது ஈஸ்வரி, கோபியை வெளியே போ சொல்கிறார். அதற்கு இனி நான் என் பொண்ணை இங்க விட்டுட்டு போக மாட்டேன். நான் அவளை கூட்டிட்டு போகிறேன் என்று கோபி பிடிவாதமாக பேசுகிறார்.

இதை கேட்ட பாக்கியா, இனியா யார்கூடயும் எங்கேயும் வரமாட்டாள் என்று சொல்கிறார். உடனே கோபி, இனியவை பார்த்து நீ வாடா செல்லம் என் கூட நம்ம வீட்டில் போய் இருக்கலாம் என்று கூப்பிடுகிறார். அதற்கு இனியா நான் எங்கேயும் வரவில்லை. அம்மா கூட இங்கதான் இருப்பேன் என்று கோபியை நோஸ்கட் பண்ணி விடுகிறார்.

ஒருவேளை இந்த மக்கு இனியா, கோபி கூட போயிருந்தால் ஈஸ்வரிக்கு ஏற்பட்ட நிலைமை தான் நமக்கும் வரும் என்று யோசித்து கூட இனியா கோபியை நம்பாமல் பாக்கியவுடன் இருக்கிறாரோ என்னமோ. ஏனென்றால் அம்மா மீது பாசமாக இருந்த ஈஸ்வரியை ஜெயிலுக்கு அனுப்பிய நிலையில், இனியாவிற்கும் இதே மாதிரி பிரச்சினை வரவும் வாய்ப்பு இருக்கிறது.

அதனால் இப்பொழுது இனியா புத்திசாலித்தனமாக கோபி கூட போகாமல் பாக்கியவுடன் இருப்பதற்கு முடிவு எடுத்து விட்டார். ஆனால் இதற்கு இடையில் பாக்கியாவை கேள்வி கேட்கும் விதமாக கோபி வீட்டிற்கு வந்து சண்டை போட்ட நிலையில், பாக்கியா வாயை திறந்து உங்களுக்கு அவ்ளோ அக்கறை இருந்துச்சுன்னா, பிள்ளைகளை தவிக்க விட்டு போயிருக்க மாட்டீங்க.

அதையெல்லாம் விட்டுவிட்டு இப்பொழுது என் வீட்டிற்கு வந்து என்னிடம் இப்படி பேசுவதற்கு உங்களுக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை என்று மூஞ்சியில் அடித்தபடி தெளிவாகப் பேசி இருந்தால் இந்த கோபியின் ஆட்டம் கொஞ்சம் அடங்கி இருக்கும். ஆனால் அதை விட்டு கோபி என்ன சொன்னாலும் அதை கேட்டுக் கொண்டுதான் இருப்பேன் என்று பாக்கியா மௌனம் காத்திருப்பது மனசுக்குள் ஏதோ ஒரு ஓரத்தில் கோபி தன்னுடைய புருஷன் என்று நினைப்பு இருக்கப் போய் தான் அமைதியாக இருக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News