வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

விஜய்யுடன் சில்லுன்னு ரொமான்ஸ் செய்யும் த்ரிஷா.. லியோ 3ம் பாடல் உயிர் பாதி உனக்கே எப்படி இருக்கு?

Leo Third Single: லியோ திரைக்கு வருவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் படகுழு ஒவ்வொரு அப்டேட் ஆக கொடுத்து ரசிகர்களை தங்கள் கண்ட்ரோலில் வைத்து வருகின்றனர். அதில் சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றதோடு சர்ச்சையையும் கிளப்பியது.

ஆனால் அதையெல்லாம் ஓரம் கட்டிய லியோ டீம் தற்போது மூன்றாவது பாடலை வெளியிட்டு இருக்கிறது. இதற்காகவே காத்திருந்த ரசிகர்கள் இப்போது இதை கொண்டாடி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இதுவரை வெளியான இரண்டு பாடல்களும் அதிரடியாக தான் இருந்தது.

ஆனால் இந்த பாடல் கண்ணுக்கு குளிர்ச்சியாக சில்லுனு மெலடியாக ரசிகர்களை மெர்சலாக்கி உள்ளது. அதிலும் பல வருடங்களுக்குப் பிறகு திரிஷா விஜய்யை இப்படி ரொமான்டிக்காக பார்ப்பதும் அசத்தலாக இருக்கிறது. இதற்கு முன்பாக இவர்கள் இருவரும் பல படங்களில் ஜோடியாக நடித்திருக்கின்றனர்.

ஆனால் இதில் கணவன் மனைவியாக குழந்தை குடும்பம் என்று இருக்கும் அவர்களுடைய கெமிஸ்ட்ரி வேற லெவலில் உள்ளது. நிஜ வாழ்க்கையில் விஜய்க்கு ஒரு மகன் மகள் இருப்பது போல் படத்திலும் காட்டப்பட்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் உயிர் பாதி உனக்கே உனில் பாதி எனக்கே என தொடங்கும் பாடலும் ரம்யமாக உள்ளது.

காஷ்மீரின் அழகோடு இந்த பாடலும் ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. மேலும் அன்பெனும் ஆயுதம் தானே ஒரு வீரனின் நெஞ்சமே. நரை வந்ததும் எனக்கே துணை நீயும் அருகே என பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்பினை காட்டுவதாக அமைந்திருக்கிறது.

இவ்வாறு மெல்லிசையுடன் வெளிவந்திருக்கும் இந்த பாடலை பார்த்த ரசிகர்கள் இரவு நேர பயணத்தின் போது கேட்பதற்கு தகுந்த பாடல் என பாராட்டி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் நீண்ட வருடங்களுக்குப் பிறகு விஜய் திரிஷாவின் ரொமான்ஸை திரையில் பார்க்கும் ஆர்வத்தையும் இந்த பாடல் தூண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News