தனுஷ் நடிப்பில் உருவான மாறன் உள்ளிட்ட சில திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாகாமல் ஓடிடியில் மட்டுமே வெளியானது. தற்போது நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு அவருடைய திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளை அலங்கரித்துள்ளது.
இதற்காகவே காத்திருந்த தனுஷின் ரசிகர்கள் முதல் காட்சியை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருந்தனர். படம் ஆரம்பித்த உடனே விசில், கைத்தட்டல் என்று ரசிகர்கள் தனுஷுக்கு அமோக வரவேற்பு கொடுத்தனர். தற்போது படத்தை பார்த்து முடித்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சோசியல் மீடியாக்களில் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: விவாகரத்துக்கு பிறகு ஓஹோன்னு வரும் தனுஷ்,எதிர்மறை விமர்சனங்களை தவிடுபொடியாக்கி சம்பவம்
அந்த வகையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராசி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்துள்ள இப்படம் தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தை பார்த்த பலரும் தனுஷ் மற்றும் நித்யா மேனனின் கெமிஸ்ட்ரி அட்டகாசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் படத்தின் முதல் பாதி கலகலப்பாக அனைவரும் ரசிக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் நித்யா மேனனின் நடிப்பு பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது. அந்த வகையில் மற்ற கதாநாயகிகளை காட்டிலும் இவருக்கு தான் அதிக பாராட்டுக்கள் தற்போது குவிந்த வண்ணம் உள்ளது.

Also Read: யார் இந்த கேப்டன் மில்லர்.. தனுஷ் அடுத்த படத்தின் கதை
தனுஷின் வழக்கமான துள்ளல் நடிப்பும் படத்திற்கு சுவாரசியத்தை கூட்டி இருப்பதாகவும், கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு அவரை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் தற்போது இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இடைவேளை காட்சியும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மேலும் படத்தில் காதல் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருந்தாலும் தனுஷ் மற்றும் நித்யா மேனனுக்கு இடையில் இருக்கும் அந்த பிரண்ட்ஷிப் காட்சிகள் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது. அந்த வகையில் இப்படம் ஒரு பக்கா எண்டர்டெயின்மென்ட் திரைப்படம் என்ற பாராட்டை பெற்றுள்ளது. இதன் மூலம் பல தோல்விகளுக்கு பிறகு தனுஷ் ஒரு வெற்றியை அடைந்துள்ளார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Also Read: முழுநேர ஹாலிவுட் ஹீரோவாக செட்டிலாக போகும் தனுஷ்