Serial: நடிகை அபிதா என்பதை தாண்டி இவரை அர்ச்சனா என்று சொன்னால் தான் பலருக்கும் ஞாபகம் இருக்கும்.
சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் சீரியலில் அர்ச்சனா என்னும் கேரக்டர் மூலம் தமிழக மக்களிடையே பெரிய அளவில் புகழ்பெற்றார்.
அபிதா இயக்குனர் பாலாவின் சேது படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்று கொடுத்தார். அதன் பின்னர் ராமராஜனுடன் ஒரு படம் ஹீரோயின் ஆக ஒரு படம் பண்ணினார்.
அபித குஜலாம்பாள் டூ அர்ச்சனா
அந்த சமயத்தில் ராமராஜனுக்கும், நளினிக்கும் விவாகரத்து ஆனதால் அதற்கு அபிதா தான் காரணம் என பெரிய அளவில் பேசப்பட்டது.
இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் சுத்தமாக கிடைக்கவில்லை. அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து சன் டிவியில் திருமதி செல்வம் சீரியல் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
ஆரம்பத்தில் அம்மா பேச்சுக்கு மட்டுமே தலையை ஆட்டும் அர்ச்சனாவாகவும், அதன் பின்னர் கணவனுக்காக கொலையே செய்யும் அளவுக்கு துணியும் அர்ச்சனாவாகவும் அசத்தியிருந்தார்.
ஒரு கட்டத்தில் செல்வத்தை வேண்டாம் என தூக்கி போடும் முடிவு எடுக்கும் போது ரசிகர்களால் பாராட்டப்பட்டார்.
இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவருக்கு தங்கமான புருஷன் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பின்னர் குழந்தைகளுக்காக மீடியாவில் இருந்து ஒதுங்கிக் கொண்டதாக பல வருடங்களுக்குப் பின் பேட்டி கொடுத்திருந்தார்.
2022 ஆம் ஆண்டு ஒளிபரப்பான மாரி சீரியல் மூலம் மீண்டும் மீடியாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.