செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் எதிரி தான்.. இன்று வரை ரஜினியுடன் இணையாத மாஸ் நடிகர்

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு படத்திலாவது இணைந்து நடித்து விட மாட்டோமா என்று பல நடிகர்களும் ஏங்கி வருகின்றனர். ஆனால் ஒரே ஒரு நடிகர் மட்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் இணைந்து நடிக்க மாட்டேன் என்று இன்றுவரை பிடிவாதமாக இருக்கிறார்.

அவர் வேறு யாரும் அல்ல நடிகர் சத்யராஜ் தான். இவர் ரஜினியுடன் இணைந்து மிஸ்டர் பாரத் போன்ற சில திரைப்படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். அதன் பிறகு அவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்ததும் மற்ற நடிகர்களுடன் இணைந்து நடிப்பதை தவிர்த்து வந்தார்.

Also read : படையப்பா படத்தில் நடிக்க சிவாஜி போட்ட கண்டிஷன்.. அசால்டா கூல் பண்ணிய சூப்பர் ஸ்டார்

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு ரஜினிக்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார். இதற்கு காரணம் காவிரி பிரச்சினையின் போது அவர்களுக்குள் ஏற்பட்ட மன கசப்பு தான் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் காவிரி பிரச்சனை மிகப் பெரிய அளவில் போராட்டமாக வெடித்தது நம் அனைவருக்கும் தெரியும். அப்போது சினிமா நட்சத்திரங்கள் பலரும் இந்த பிரச்சனைக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அப்போது தமிழர்களுக்காக பேசிய சத்யராஜ் பல விஷயங்களை முன் வைத்தார்.

Also read : ரஜினிகாந்தை ஓரம்கட்ட கொண்டுவரப்பட்ட நடிகர்.. கடைசில அவர் நிலைமையை பாருங்க

அந்த வகையில் அவர் தமிழ் நடிகர்கள் மட்டும்தான் இந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கிறார்கள். வேறு மொழி நடிகர்கள் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க மறுக்கிறார்கள் என்று பேசி இருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையான கருத்தாக அப்போது பேசப்பட்டது.

ஏனென்றால் இந்த விவகாரம் குறித்து ரஜினி பெரிய அளவில் தன்னுடைய கருத்தை முன்வைக்கவில்லை. இதனால் சத்யராஜ் ரஜினியை பற்றி தான் மறைமுகமாக தாக்கி பேசுகிறார் என்று அப்போது பல விமர்சனங்கள் எழுந்தது. இருப்பினும் அவர் தன்னுடைய கருத்தில் உறுதியாக நின்றார். அதன் பிறகு தான் அவர்கள் இருவரும் எதிர எதிர் துருவங்களாக மாற ஆரம்பித்தனர். அதனால் தான் சத்யராஜ் இன்றுவரை சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்க மறுத்து வருகிறார்.

Also read : ரஜினி தன் அம்மா அப்பா பற்றி சொல்லிய ஒரே தமிழ் படம்.. விசுவையே குழப்பிய பெயர்கள்

Trending News