ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

ரஜினிகாந்தை தூக்கிவைத்து பேசுவதை பிடிக்காத ஒரே நடிகர்.. பத்திரிக்கையாளர்களிடம் செய்த பஞ்சாயத்து

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அளவுக்கு புகழின் உச்சியில் இருப்பவர் ரஜினிகாந்த். இந்தியாவில் மட்டுமல்லாமல் இவருக்கு வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெளிநாட்டிலும் நல்ல வசூலைப் பெற்று வருகிறது.

அதுமட்டுமல்லாமல் அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகராகவும் இவர் இருக்கிறார். இதனால் திரையுலகில் மட்டுமல்லாமல் ரசிகர்கள், பத்திரிக்கையாளர்கள் என்று அனைவரும் அவரை கொண்டாடி வருகின்றனர். ஆனால் அவருக்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது.

சில விஷயங்களில் மனிதர்களுக்கு இருக்கக் கூடிய நியாயமான பிரச்சனைகளை ரஜினியும் சந்தித்துள்ளார். இதனால் அப்போது சக மனிதர்களுடன் நெருக்கம் காட்டாமல், பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் எந்த ஒரு நல்ல காரியங்களுக்கும் ஒன்று கூடாமல் தனிமையாக தன் காலத்தை கழித்துள்ளார்.

இப்படி அனைவரையும் ஒதுக்கிவிட்டு தனிமையாக வாழ்ந்து வருபவரை ஏன் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள் என பத்திரிகையாளரிடம் நடிகர் விஜயகாந்த் ஒரு முறை கேட்டுள்ளார். நாங்கள் எந்தக் குறையும் இல்லாத அளவுக்கு நடந்து கொள்கிறோம். எல்லா விழாக்களுக்கும் எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம்.

இதனால் அவரை விட ஒரு படி மேலே தான் நாங்கள் இருக்கிறோம். அவரைப் பற்றி மட்டும் உயர்வாக பத்திரிகைகளில் எழுதும் நீங்கள் ஏன் எங்களை பற்றி எல்லாம் எழுதுவது கிடையாது என கேப்டன் விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களிடம் ஒருமுறை பஞ்சாயத்து செய்துள்ளார்.

மேலும் அவரைப் பற்றி எழுதுவதை நான் தப்பாக சொல்லவில்லை. ஆனால் சிறிது காலம் அவரை பற்றி எழுதுவதை விட்டுவிட்டு அவரை தனிமையில் விடுங்கள் என்று விஜயகாந்த், ரஜினியைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

Trending News