வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பேராசையால் கேரியரை தொலைத்த பிரபல நடிகர்.. வெற்றிக்காக இன்று வரை போராடும் ஷங்கரின் ஹீரோ

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கவனிக்கப்பட்ட இயக்குனராக இருந்த பேரரசு திருப்பாச்சி, சிவகாசி போன்ற வெற்றித் திரைப்படங்களை கொடுத்தார். ஆனால் அதன்பிறகு அவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை.

அந்த வகையில் இவர் இயக்கிய பழனி திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்த பரத்திற்கு இயக்குனர் ஓவர் பில்டப் கொடுத்து இருப்பார். அதிலும் ஆத்த குளமாக்கி, குளத்த குட்டையாக்கி போன்ற ஏகப்பட்ட பஞ்ச் டயலாக்குகளை இயக்குனர் வைத்திருப்பார்.

அதுவரை ஓரளவுக்கு வெற்றி படங்களை கொடுத்து வந்த பரத் இந்த திரைப்படத்தின் மூலம் ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவும் மாறினார். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் இயக்குனர் பரத்திடம், விஜய் போன்று நடிக்க வேண்டும் என்று கூறி இருப்பார் போல.

அவரும் அதையே வேதவாக்காக நினைத்துக் கொண்டு அச்சு அசல் விஜய் போலவே நடித்து ரசிகர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானார். வழக்கமாக அண்ணன், தங்கை கதையை வைத்து படம் எடுக்கும் பேரரசு இதில் சற்று மாறுதலாக அக்கா, தம்பி பற்றிய கதையை இயக்கி இருந்தார்.

இதில் பரத்துக்கு அக்காவாக நடிகை குஷ்பு நடித்திருப்பார். மேலும் நடிகை காஜல் அகர்வால் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இவ்வளவு நட்சத்திரங்கள் இருந்தும் இந்த படம் ஓவர் பில்டப்பின் காரணமாக தோல்வியை தழுவியது.

இந்த படத்திற்கு பிறகு நடிகர் பரத் நடித்த அடுத்தடுத்த படங்களும் தோல்வியை சந்தித்தது. அதிலிருந்து அவர் இப்போது வரை சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடம் கிடைக்காமல் போராடி வருகிறார். எப்படியாவது ஒரு வெற்றியை கொடுத்து விட வேண்டும் என்ற நோக்கில் பரத் தற்போது மீண்டும் திரைப்படங்களில் ஆர்வத்துடன் நடித்து வருகிறார். இவரை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தனது பாய்ஸ் படத்தில் தான் முதலில் அறிமுகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Trending News