வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இந்த காம்போவில் இனிமே நடிக்க வாய்ப்பே இல்லாத 5 நடிகர்கள்.. ஈகோ தலைக்கேறிய சந்தானம்

Tamil Actors Combo: தமிழ் சினிமாவில் இனிமேல் இந்த காம்போ மீண்டும் ஒருமுறை படத்தில் இடம்பெற வாய்ப்பே இல்லை. அந்த நடிகருடன் மட்டும் கூட்டணி போடக்கூடாது என்பதில் 5 ஹீரோக்கள் உறுதியுடன் இருக்கின்றனர். அதிலும் சந்தானத்திற்கு ஈகோ தலைக்கேறி இருக்கிறது.

விஜய்- நெப்போலியன்: போக்கிரி படத்தில் விஜய் மற்றும் நெப்போலியன் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நெப்போலியனின் நண்பர்கள் விஜய்யிடம் வம்பு இழுத்து தகராறில் ஈடுபட்டனர். அதன் பிறகு நெப்போலியன் உடன் விஜய் சுத்தமாகவே பேச மறுத்துவிட்டார். ஒரு பேட்டியில் நெப்போலியன் பகிரங்கமாகவே விஜய் உடன் பேச விரும்புகிறேன் என விருப்பம் தெரிவித்தும், விஜய் முன்வர தயாராகவில்லை. இதனால் இனி இவர்கள் இருவரும் இன்னொரு படத்தில் சேர்ந்து நடிப்பதற்கு வாய்ப்பே இல்லை.

ரஜினி- சத்யராஜ்: 80களில் ரஜினி ஹீரோவாக நடித்தபோது சத்யராஜும் ஹீரோவாக தான் நடித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ரஜினியின் படத்திற்கு சத்யராஜ் வில்லனாக நடிக்க துவங்கினார். அப்படி இவர்கள் இருவரும் இணைந்து நிறைய படங்களில் நடித்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக ‘மிஸ்டர் பாரத்’ படத்தில் ‘என்னம்மா கண்ணு சௌக்கியமா’ என்ற பாடலில் ஏட்டிக்கு போட்டியாய் இவர்கள் இருவரும் இணைந்து அடித்த லூட்டியால் அந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனது.

இருப்பினும் ஹீரோவுக்கு கிடைக்க கூடிய மதிப்பு மரியாதை வில்லனாக நடித்த சத்யராஜுக்கு கிடைக்கவில்லை என்ற மனக்கசப்பு அவரிடம் இருந்துள்ளது. இதனால் ரஜினியின் படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என ஒரு இயக்குனர் வீடு தேடி வந்து கேட்டபோது, ரஜினி என்னுடைய படத்தில் ரஜினி வில்லனாக நடிக்க தயாரா என முரண்பாடாக பேசியதால் அன்று முதல் இன்று வரை இவர்கள் இருவரும் எந்த படத்திலும் இணைந்து நடிப்பதில்லை.

Also Read: தோல்வியை மேடையில் ஒப்புக்கொண்ட சிவகார்த்திகேயன்.. அதுக்குன்னு ஓவர் கான்ஃபிடன்ட் வேண்டாம் ப்ரோ

சூர்யா- விக்ரம்: பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தில் சூர்யா மற்றும் விக்ரம் இருவரும் இணைந்து நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தனர். ஆனால் இந்த படத்தில் வெட்டியான் கேரக்டரில் நடித்த விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தது, அதே படத்தில் நடித்த சூர்யாவிற்கு எந்த விருதும் கிடைக்காததால் அன்றிலிருந்து இன்று வரை விக்ரமை தன்னுடைய போட்டியாளராகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் பிதாமகனுக்கு பிறகு எந்த படத்திலும் சேர்ந்து நடிக்க விரும்பவில்லை, இனியும் நடிக்க வாய்ப்பு இல்லை.

தனுஷ்- ரோபோ சங்கர்: விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பேமஸ் ஆன ரோபோ சங்கர், அதன் பிறகு சினிமாவில் டாப் நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அதிலும் மாரி படத்தில் இவர் தனுஷ் உடன் முழு படத்திலும் பயணிப்பார். தனுஷ் எப்படி சிவகார்த்திகேயனை தூக்கிவிட்டு அழகு பார்த்தாரோ! அதேபோல ரோபோ சங்கருக்கும் ஒரு சில பட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.

ஆனால் அந்த நன்றியை மறந்து விட்டு மாரி படத்தில் நடிக்கும் போது தனுஷுக்கு இருந்த குடிப்பழக்கத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக சொல்லி அசிங்கப்படுத்தி விட்டார். இது தனுஷை மிகவும் பாதித்ததால் இனி ரோபோ சங்கருடன் எந்த பேச்சு வார்த்தையும் வைத்துக்கொள்ளக்கூடாது என ஒதுங்கி விட்டார்.

Also Read: ஆங்கிலோ இந்தியன் கலக்கிய 5 படங்கள்.. சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்ட ரசகுல்லா

சிவகார்த்திகேயன்- சந்தானம்: எந்த சின்னத்திரையில் இருந்து சிவகார்த்திகேயன் வெள்ளி திரைக்கு வந்தாரோ, அதே சின்னத்திரையில் மூலம் தான் சந்தானமும் சினிமாவிற்குள் நுழைந்தார். ஆனால் சிவகார்த்திகேயனுக்கு முன்பே சந்தானம் படங்களில் நடிக்க துவங்கினார். ஆனால் சந்தானம் ஹீரோவாக நடித்த பல படங்கள் படு தோல்வியை சந்தித்தது.

சிவகார்த்திகேயன் இப்போது டாப் நடிகர்களின் லிஸ்டில் இடம் பிடித்துள்ளார். எனவே தனக்குப்பின் வந்து சினிமாவில் உயர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயனுடன் ஒருபோதும் நடிக்க கூடாது என சந்தானத்திற்கு ஒரு ஈகோ இருக்கிறது. அதனால் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க வாய்ப்பே இல்லை.

Also Read: தனுஷுக்கு இருக்கும் கெட்ட பழக்கத்தை அம்பலப்படுத்திய ரோபோ சங்கர்.. வாயக் கொடுத்து மாட்டிக்கிட்டியே பங்கு

Trending News