வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இந்த வார நாமினேஷனில் சிக்கிய 6 போட்டியாளர்கள்.. மக்கள் துரத்தி அடிக்க போவது இவரை தான்

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது சூடு பிடித்துள்ள நிலையில் நேற்று சரவண விக்ரம் வீட்டை விட்டு வெளியேறினார். அதை தொடர்ந்து மீதம் இருக்கும் 10 பேர்களில் இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு இப்போது அதிகமாக இருக்கிறது.

அதன் படி இன்று நடைபெற்ற ஓப்பன் நாமினேஷனில் பலரும் டார்கெட் செய்தது நிக்சனை தான். அந்த வரிசையில் மாயா, நிக்சன், மணி, ரவீனா, தினேஷ், விஷ்ணு ஆகிய ஆறு பேரும் இந்த வார பிக்பாஸ் நாமினேஷனில் சிக்கியுள்ளனர். இதில் மாயாவை துரத்தி விட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் எண்ணம்.

Also read: மாயா செய்த கேவலமான வேலை.. மொத்த விஷத்தையும் கக்கி பிக்பாஸிடம் வாங்கிய குட்டு

ஆனால் பிக்பாஸ் இதை செயல்படுத்த நினைத்தாலும் கமல் அதற்கு சம்மதிக்க மாட்டார். அதனால் மீதம் இருக்கும் ஐந்து நபர்களில் நிக்சன் மற்றும் ரவீனா வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதில் நிக்சன் இப்போது கொஞ்சம் அடக்கி வாசித்தாலும் அவர் மீது இருக்கும் கோபம் நெட்டிசன்களுக்கு குறையவில்லை.

அதனால் அவருக்கு குறைந்தபட்ச ஓட்டுகள் கிடைக்கும் என்பது உறுதி. அதேபோல் பிக்பாஸில் நடந்த பல குழப்பங்களுக்கு காரணம் பேய் குழந்தை ரவீனா தான். தெரிந்தோ தெரியாமலோ அவர் செய்த விஷயம் பூதாகரமாக வெடித்தது. மேலும் கடந்த வாரம் அமெரிக்க ஆன்ட்டி மணியை விமர்சித்த போது கூட இவர் சப்போர்ட் செய்யவில்லை.

Also read: பிக்பாஸ் வீட்டில் சரவண விக்ரம் வாங்கிய மொத்த சம்பளம்.. மிக்சர் சாப்பிட்டுட்டு சும்மா இருந்ததுக்கே இத்தனை லட்சமா!

இப்படி அவருடைய கிரைம் ரேட் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அதனாலேயே இந்த வாரம் அவருக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகள் குறையவும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் இன்று நடந்த நாமினேஷனின் தாக்கம் தற்போது பிக் பாஸ் வீட்டில் எதிரொலித்து வருகிறது.

மணி நிக்சனை பற்றியும், விசித்ரா தினேஷ் பற்றியும், தினேஷ் விச்சு பற்றியும் ஆதங்கத்தோடு பேசி வருகின்றனர். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கும் நிலையில் இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Trending News